பக்கம் எண் :

6தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்


கடாரம்வரை படையெடுத்து வென்றார். இவர் மதுரையில் சோழ
பாண்டியர்
ஆட்சியை ஏற்படுத்தினார். மூன்றாம் குலோத்துங்கன
கலிங்கத்தின் மீது படையெடுத்து அதை வென்றார். பிற்காலச்
சோழர்கள் ஆட்சிக் காலம் “இடைக்காலத் தமிழக வரலாற்றின்
பொற்காலம்
” எனப்படுகிறது. இம்மன்னர்கள் ஆட்சிக்காலத்தில்
தமிழகக் கோயிற் கலை உயர்ந்த நிலையை அடைந்தது. தஞ்சைப்
பெருங்கோவில், கங்கை கொண்ட சோழபுரக் கோவில்,
கும்பகோணம் தாராசுரக் கோவில், கம்பகரேஸ்வரர்
கோவில்
ஆகிய சைவ வழிபாட்டுத் தலங்கள் பிற்காலச் சோழ
மன்னர்களின் புகழுக்கு அழியாச் சான்றுகள் ஆகும். இவர்கள்
ஆட்சிக் காலத்தில் சில வைணவக் கோயில்களும் சிறப்புப்
பெற்றன.

பாண்டியப் பேரரசுக் காலம்

முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக்குப் பிறகு
பாண்டிய மன்னர்கள் மீண்டும் எழுச்சியுற்றனர். இக்காலப்
பாண்டியர்களில் மிக்க புகழ் பெற்றவர் சடையவர்மன் சுந்தர
பாண்டியன்
(1251-1268) ஆவார். இவர் காலத்தில் பாண்டிய
அரசின் எல்லை தெற்கில் கன்னியாகுமரியிலிருந்து வடக்கில்
நெல்லூர்வரை பரவிப் பாண்டி அரசு ஒரு ‘பேரரசாக’ விளங்கியது.
மாறவர்மன் குலசேகரன் என்ற பாண்டிய மன்னன் கி.பி. 1279இல்
நடந்த ஒரு போரில் மூன்றாம் இராஜேந்திரன் என்ற சோழமன்னரைத்
தோற்கடித்தார். இதனால் தமிழகத்தில் சோழர்களின் ஆதிக்கம்
முடிவுற்று, பாண்டிய மன்னர்களின் ஆதிக்கம் மட்டும் நிலைபெற்றது.

இஸ்லாமிய படையெடுப்பு

இந்திய வரலாற்றில் கி.பி. 712இல் முகமது-பின்-காசிம்
தலைமையில் அரேபியர்கள் சிந்துவின்மீது படையெடுத்து அதை
வென்று ஆட்சி புரிந்தனர். கி.பி. 1206 முதல் டில்லி சுல்தான்கள்
இந்தியாவின் வட பகுதியை ஆட்சி புரியத் தொடங்கினர்.
ஆனால், இந்தியாவின் தென்பகுதியிலுள்ள தமிழகத்தில்