பக்கம் எண் :

56தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

“பல்லவர்களுடைய கட்டடக் கோயில்களிலேயே மிகவும்
உன்னதச் சிறப்பும் எழிலும் வாய்ந்தது கைலாசநாதர்
ஆலயம்” ஆகும்.

இறைவனது கருவறைமீதுள்ள விமானம் இக்கோவிலின்
தனிச்சிறப்பு ஆகும். இவ்விமானம் அதிட்டானம்முதல் உச்சிப்
பகுதிவரை கல்லாலானது. அழகுமிக்க தோற்றத்தைக்
கொண்டுள்ளது. பிற்காலத்தில் தமிழகத்தில் எழுந்த விமானங்களுக்கு
ஒரு சிறந்த ’முன்மாதிரி’யாக இது விளங்கிற்று.
மாமல்லபுரத்திலுள்ள தர்மராஜ ரதத்தைப் போன்ற உச்சிப்
பகுதியை இவ்விமானம் கொண்டுள்ளது. பிரதான ஆலயத்தைச்
சுற்றிப் பல சிறு துணை ஆலயங்கள் உள்ளன. அவை
ஒவ்வொன்றும் அழகிய சிறு விமானத்தைக் கொண்டுள்ளன.
சிறு ஆலயங்கள் இராஜசிம்மனுடைய பட்டத்தரசி இரங்க
பதாகை
என்பவரால் கட்டப்பட்டதாகும்.

ஆலயத்தின் வெளி மதில்களில் சிவபெருமானின்
பல்வகை வடிவங்களைக் காட்டும் அழகிய சிற்பங்கள் உள்ளன.
அவை தஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர், ஊர்த்துவ தாண்டவர்,
ஹரிகரர்
முதலிய திருவுருவங்கள் ஆகும். உமையன்னை,
முருகப்பிரான், திருமால்
ஆகிய தெய்வங்களின் எழில்
சிற்பங்களும் இங்கு உள்ளன. துணை ஆலயங்களிலும் பல
அழகிய தெய்வத் திருவுருவங்கள் உள்ளன.

இக்கோவிலின் முகப்பில் இராஜசிம்மனின் மகன் மூன்றாம்
மகேந்திரவர்மனால் கட்டப்பட்ட சிறு கோவில் உள்ளது. இங்குக்
காணப்படும் சிவபெருமானது திருவுருவங்கள் சமயச் சிறப்பும்
கலைச் சிறப்பும் மிக்கவையாகும்.

கைலாசநாதர் ஆலயத்தில் புராணங்களிலும் இதிகாசங்களிலும்
கூறப்பட்டுள்ள சிவபெருமானது பல்வேறு வடிவங்களை அழகிய
சிற்பங்களாகப் பல்லவ சிற்பிகளின் உளிகள் வடித்துள்ளதைக்
காணலாம்.

பிரதான ஆலயத்திலும் அதைச் சுற்றிலும் உள்ள துணை
ஆலயங்களிலும் சுமார் 1300 வருடங்களுக்கு மேற்பட்ட பல்லவர்
கால ஓவியங்கள் உள்ளன. இவற்றுள் குறிப்பிடத்தக்க