ஒன்று சிவனுக்கும் பார்வதிக்கும் நடுவில் கந்தர் உள்ள காட்சியாகும்.
கி.பி. 14ஆம் நூற்றாண்டில் விஜயநகர அரசர் குமார கம்பணர்
காலத்தில், பல்லவர் ஓவியங்கள்மீது புதிய ஓவியங்கள்
தீட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவை ‘இரு
அடுக்கு ஓவியங்கள்’ எனப்படுகின்றன. பல்லவர் ஓவியங்களை
அறிஞர் தூப்ராய் என்பவர் கி.பி. 1931இல் கண்டுபிடித்தார்.
இரண்டாம் விக்ரமாதித்தன் என்ற சாளுக்கிய மன்னன்
பல்லவர்களை வென்று காஞ்சியைப் பிடித்தபொழுது (கி.பி. 740)
காஞ்சி நகரின் சிறந்த கலைஞர்களைப் பட்டகடலுக்குக் (கர்நாடகா)
கொண்டு சென்றார். அங்கு அரசி லோகமாதேவியின் கட்டளைப்படி
விருப்பாஷா என்ற கோவில் நிறுவப்பட்டது. இக்கோவில் காஞ்சி
கைலாசநாதர் கோவிலைப் பல அம்சங்களில் ஒத்திருக்கிறது என்று
கூறப்படுகிறது.
கைலாசநாதர் கோவில், பல்லவ மன்னர்கள் நமக்கு
விட்டுச் சென்றுள்ள ஒரு சிறப்புமிக்க கோயிற்கலைச் செல்வமாகும்.
முற்றிலும் மணற்பாங்கான கல்லால் கட்டப்பட்டுள்ள இக்கோவிலை
நல்ல முறையில் நாம் காக்க வேண்டும்.
காஞ்சிபுரம் நகரில் மேலும் பல சிவன் கோவில்கள்
உள்ளன. இவற்றுள் குறிப்பிடத்தக்கது முக்தீஸ்வரர் கோவில்
ஆகும். இது இரண்டாம் நந்திவர்ம பல்லவ மன்னன்
காலத்தில் கட்டப்பட்டது.
காமாட்சியம்மன் கோவில்
காஞ்சி நகரின் மத்தியில் காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில்,
‘பெரிய புராணம்’ காலம் முதல் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. விஜய நகர அரசர்கள் காலத்தில் இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டது.
காயத்ரி மண்டபத்தில் காமாட்சியம்மன் காட்சி தருகிறார்.
காமகோடி காமாட்சி, ஸ்ரீ சக்ரம் அருபலஷிமி, அன்னபூரணி,
மகிசாசுரமர்த்தினி, காசி விஸ்வநாதர் ஆகிய தெய்வங்களின்
சந்நிதிகளும் இக்கோவிலில் உள்ளன.
|