‘உலகளந்த பெருமாள்’ பெருமாளின் பத்து அவதாரங்களில்
ஒன்றாகும். இங்கு பெருமாளின் தூக்கிய திருவடியைக்
காணலாம். இக்கோவில் பல்லவர்கள், சோழர்கள்
ஆகியோரின் திருப்பணிகளைக் கொண்டுள்ளது.
காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள இடங்களும்
பண்பாட்டுச் சின்னங்களும்
திருப்பருத்திக்குன்றம்
காஞ்சிபுரத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் ‘ஜைன காஞ்சி’
பகுதியில் திருப்பருத்திக்குன்றம் உள்ளது. திகம்பரர், சுவேதாம்பரர்
என்ற சமணர்களின் வழிபாட்டுத் தலமாகத் திருப்பருத்திக்குன்றம்
உள்ளது.
பல்லவர் காலத்தில் எழுந்த சமணர் கோவில்
இங்கு உள்ளது.
முதலில் சமணராயிருந்து பின் திருஞானசம்பந்தர் முயற்சியால்
சைவ சமயத்தில் சேர்ந்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மன்
(கி.பி. 600-630) திருப்பருத்திக்குன்ற சமண ஆலயத்திற்குத்
திருப்பணி ஆற்றியுள்ளார். முதலாம் குலோத்துங்க சோழனின்
திருப்பணியையும் இவ்வாலயம் கொண்டுள்ளது.
மலையனார் கோவில் எனப்படும்
சந்திரபிரபர் ஆலயம்
பல்லவர்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இவ்வாலயத்தில் சமண சமயத்தின் 17 ஆவது தீர்த்தங்கரரான
குந்துநாதரின் சலவைக் கல் சிலை உள்ளது.
சந்திரபிரபர் ஆலயத்திற்கு அருகில் வர்த்தமானர் ஆலயம்
உள்ளது. இவ்வாலயத்தில் 24ஆவது தீர்த்தங்கரராகிய
மகா
வீரரின் திருவுருவச் சிலை உள்ளது. இங்கு வேறு பல
தீர்த்தங்கரர்களின் சந்நிதிகளும் உள்ளன.
சங்கீத மண்டபத்தில் சமண தீர்த்தங்கரர்களான
ரிஷப தேவர், நேமிநாதர், வர்த்தமானர் ஆகியோரின்
திரு உருவங்களைக் கொண்டுள்ள அழகிய ஓவியங்கள் உள்ளன.
சங்கீத மண்டபம் விஜயநகர மன்னர் புக்கராயர் காலத்தில்
அவரது அமைச்சர் இருகப்பன் என்பவரால் எடுக்கப்பட்டதாகும்.
|