உத்திரமேரூர்
காஞ்சிபுரத்திலிருந்து 27 கி.மீ. தொலைவில் உத்திரமேரூர்
(உத்தரமல்லூர்) என்ற இடம் உள்ளது. இங்குச் சுந்தர
வரதராஜப்பெருமாள் கோவில் உள்ளது. இது ஒரு
தொன்மைமிக்க வைணவ வழிப்பாட்டுத் தலம் ஆகும்.
இக் கோவில் தந்திவர்ம பல்லவன் காலத்தில் கட்டப்பட்டது.
சோழ மன்னர்களின் திருப்பணிகளையும் இக்கோவில்
கொண்டுள்ளது. இக்கோவிலின் சிறப்பு, பெருமாளின்
கருவறைமீது எழுப்பப்பட்டுள்ள விமானம் ஆகும். ஒன்றன்மேல்
ஒன்றாக மூன்று கருவறைகள் இக்கோவிலில் உள்ளன. பெருமாள்
இருந்த நிலை, கிடந்த நிலை, நின்ற நிலை ஆகிய மூன்று
தோற்றங்களில் காட்சியளிக்கிறார். (இது போன்ற விமான
அமைப்பு தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் வைகுந்தப் பெருமாள்
கோவில், திருக்கோஷ்டியூர் சௌமிநாராயணப் பெருமாள்
கோவில், மதுரை கூடலழகர் பெருமாள் கோவில்
ஆகியவற்றில் உள்ளன). தமிழகக் கோவிற்கலைச் சிறப்புக்கு
இவ்விமானம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
சோழர் காலத்து ஊராட்சிமுறை பற்றிய செய்திகளைக்
கூறும் கல்வெட்டுகள் வைகுந்தப் பெருமாள் கோவிலின் மேற்குச்
சுவரில் உள்ளன. இவை முதலாம் பராந்தகச் சோழனால்
(கி.பி. 907-953) பொறிக்கப்பட்டவை. வரலாற்றுச் சிறப்புமிக்க
இக்கல்வெட்டுகள் சோழர் காலத்தில் நிலவிய கிராமச்
சபைகளின் தேர்தல்முறை, அமைப்பு முதலியவற்றைப்
பற்றி விரிவான செய்திகளைத் தருகின்றன.
காஞ்சிபுரத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில்
மாமண்டூர்
உள்ளது. இங்கு மகேந்திரவர்ம பல்லவன் காலத்து
(கி.பி 600-630) குடைவரைக் கோவில்கள் இரண்டு உள்ளன.
ஒன்று திருமாலுக்கும், மற்றொன்று சிவனுக்கும்
வடிக்கப்பட்டவையாகும்.
வந்தவாசி
காஞ்சிபுரத்திலிருந்து 44 கி.மீ. தொலைவில் வந்தவாசி
உள்ளது. இங்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வந்தவாசிப் போர்
|