பக்கம் எண் :

66தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

ஸ்ரீ பெரும்புதூர்

காஞ்சிபுரத்திலிருந்து 36 கி.மீ. தொலைவில் ஸ்ரீபெரும்புதூர்
உள்ளது. இவ்வூரின் புகழுக்குக் காரணம் இங்குள்ள
ஆதிகேசவப் பெருமாள் கோவில்
ஆகும்.

இராமானுஜர் என்ற வைணவப் பெரியார் ஸ்ரீபெரும்புதூரில்
கி.பி. 1016இல் தோன்றினார். இவர் விசிஸ்ட அத்வைதம் என்ற
வைணவ நெறியைப் போதித்தார். ‘உடையவர்’ என்று
போற்றபடுகிறார். வைணவ சமயத்தில் பெருந்தலைவராக
விளங்கிய இராமானுஜருக்கு அவர் பிறந்த ஊரிலுள்ள
ஆதிகேசவப் பெருமாள் கோவிலில், பெருமாளின் சந்நிதியை
அடுத்து ஒரு பெரிய சந்நிதி உள்ளது. இராமானுஜர் சந்நிதிக்கு
அருகில் கருடாழ்வார் சந்நிதி உள்ளது. உற்சவ மண்டபத்தை
அடுத்து ஸ்ரீஎதிராஜநாதவல்லி தாயார் சந்நிதி உள்ளது.

இராமானுஜர் காலத்திற்கு முன்பே சிறந்து விளங்கிய
இக்கோவிலில் விஜயநகர மன்னர்கள் காலத்தில் விரிவான
திருப்பணிகள் நடந்தன.

பெருமாளின் சந்நிதியும், இராமானுஜரின் சந்நிதியும்
முற்றிலும் கல்லினாலானவை; சிற்ப வேலைப்பாடுமிக்கவை.
இராமானுஜர் சந்நிதிக்கு எதிரில் உள்ள மண்டபத்தில் ஒரே
கல்லினாலான தூணில் 4 யாளிகளையும் வீரர்களையும்கொண்ட
நான்கு தூண்கள் உள்ளன. இவை சிறந்த கலைப்படைப்புகளாகும்.

ஆண்டாள் சந்நிதியிலுள்ள 12 தூண்களிலும் யாளியின்மீது
வீரர்கள் உள்ள அழகிய சிற்பங்கள் உள்ளன. உற்சவ
மண்டபத்திலுள்ள 20 தூண்களில், 16 தூண்களில் குதிரைமீதுள்ள
வீரர்களின் சிற்பங்களும் நான்கில் யாளியின் சிற்பங்களும் உள்ளன.
இவை வேலைப்பாடுமிக்கவை.

கோவிலுக்கு எதிரிலுள்ள நூற்றுக்கால் மண்டபத்திற்கு
அருகில் கூரத்தாழ்வார் சந்நிதி உள்ளது. கோபுரவாயிலுக்குச்
சிறிது தெற்கில் ஸ்ரீமணவாள மாமுனியின் சந்நிதி உள்ளது. இவர்
தென்கலை வைணவத் தோற்றகர் ஆவார்.