பச்சைநிறக் கல்லால் கட்டப்பட்டுள்ளது. இதனருகில்
ஜு ம்மா மசூதி உள்ளது. இது ஒளரங்கசீப்பின் தளபதி
சுல்பிகர்கானால் கட்டப்பட்டது. இதன் சில பகுதிகள்
சாதத் உல்லாகானாலும், அன்வாருதீனாலும் கட்டப்பட்டுள்ளன.
ஆர்க்காடு அருகில் இராணிப்பேட்டை என்ற நகர்
ஆர்க்காட்டின் நவாபான சாதத் உல்லாகானால்
தோற்றவிக்கப்பட்டதாகும். சாதத் உல்லாகானுடன் வீரமாகப் போர்
புரிந்து மாண்டவர் செஞ்சியை ஆண்ட தேசிங்குராஜன் ஆவார்.
கணவன் இறந்தவுடன் அவரது மனைவி உயிர்வாழ விரும்பாது
உடன்கட்டையேறினார். இந்த ‘ராணி’யின் நினைவாகவே நவாப்
சாதத் உல்லாகான் ‘ராணிப்பேட்டை’யை உருவாக்கினார்.
|