பக்கம் எண் :

86தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

6. திருவண்ணாமலை

திருவண்ணாமலை என்ற நகர் வேலூரிலிருந்து 79 கி.மீ.
தொலைவில் உள்ளது. திருவண்ணாமலையின் சிறப்புக்குக்
காரணம் இங்குள்ள புகழ்மிக்க சிவன் கோயில் ஆகும். இது
அண்ணாமலையார் கோவில் எனப்படுகிறது.
தமிழ்நாட்டிலுள்ள மிகப்பெரிய கோவில்களில் இது
ஒன்றாகும். திருவண்ணாமலை என்ற மலையின் அடிவாரத்தில்
இக்கோவில் அமைந்துள்ளது.

இறைவி பார்வதி தேவி, திருவண்ணாமலையில் தவம்
செய்து சிவபெருமானுடைய இடப்பாகத்தைப் பெற்றார் என்பதும்,
சிவபெருமான் நெருப்புமலையாய்த் தோன்றித் தாமே பரம்பொருள்
என்று மெய்ப்பித்த பதி திருவண்ணாமலை என்பதும்
புராணச் செய்திகளாகும்.

திருவண்ணாமலைக் கோவில் பழமைமிக்கது.
கி.பி. 7ஆம் நூற்றாண்டில் இக்கோவில் சிறிய அளவில்
செங்கற்சுதை மாடமாக இருந்திருக்கலாம் என்று
கருதப்படுகிறது.

மன்னர்களின் திருப்பணிகள்

அண்ணாமலையார் கோவிலில் தஞ்சைச் சோழ மன்னர்கள்,
ஒய்சள மன்னர்கள், விஜய நகர மன்னர்கள் ஆகியோரின்
திருப்பணிகள் மிகுதியாக உள்ளன.

விஜயாலயன் வழிவந்த சோழ மன்னர்கள் இக்கோவிலின்
கருங்கல் திருப்பணியைத் தொடங்கி வைத்தனர். இக்கோவிலிலுள்ள
9 கோபுரங்களில் கிளிக் கோபுரமே மிகத் தொன்மையானது.
இக்கோபுரம் கி.பி. 1063இல் வீர ராஜேந்திர சோழனால்
கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது.

கி.பி. 14ஆம் நூற்றாண்டில் ஒய்சளர்களுடைய துணைத்
தலைநகராகத் திருவண்ணாமலை விளங்கியது. அண்ணாமலை