யார் கோவிலிலுள்ள ‘வல்லாள மகாராஜா கோபுரம்’ மூன்றாம்
வல்லாள மகாராஜாவால் (1291-1342) கட்டப்பட்டிருக்க வேண்டும்
எனத் தெரிகிறது. இக்கோவிலின் நந்தி மண்டபம் வல்லாள
மன்னரின் திருப்பணி என்பர்.
ஒய்சள மன்னர்களுக்குப் பிறகு விஜய நகரப் பேரரசர்கள்
காலத்தில் அண்ணாமலையார் கோவிலின் கட்டடக்கலை உச்ச
நிலையை அடைந்தது. கிருஷ்ண தேவராயர் (1509-1529) தாம்
பல போர்களில் பெற்ற வெற்றியின் நினைவாக
அண்ணாமலையார் கோவிலின் கிழக்குக் கோபுரத்தைக்
கி.பி. 1516இல் கட்ட ஆரம்பித்தார். இக்கோபுரம் தஞ்சையில்
நாயக்கர் ஆட்சியைத் தோற்றுவித்த செவ்வப்பர் என்பவரால்
கட்டி முடிக்கப்பட்டது. இக்கோபுரம் இராய கோபுரம்
எனப்படுகிறது. அண்ணாமலையார் கோவிலிலுள்ள
இராய கோபுரம் தமிழ்நாட்டிலுள்ள
கோபுரங்களிலேயே
மிக உயர்ந்ததாகும். இதன் உயரம் 66 மீட்டர் (217 அடி)
ஆகும்.
சிவகங்கைக் குளமும் ஆயிரங்கால் மண்டபமும் கிருஷ்ண
தேவராயர் காலத்தில் உருவானவையாகும். விஜயநகர் கால
கட்டடக் கலைக்கும் சிற்பக் கலைக்கும் ஒரு
எடுத்துக்காட்டாக
ஆயிரங்கால் மண்டபம் விளங்குகிறது.
இராய கோபுரத்தின்
மேல் முகட்டில் அழகிய ஓவியங்கள்
உள்ளன. இவற்றுள் ஒன்று “யானையை வேட்டையாடி
அடக்கி
வருவதுபோல் உள்ள ஓவியமாகும்”. இந்த ஓவியங்கள் விஜய
நகர அரசு கால ஓவியக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் சீரிய திருப்பணிகளை
மேற்கொண்டு அண்ணாமலையார் கோவிலில் குடமுழுக்கு
விழாக்கள் நடத்தியுள்ளனர். இக்கோவிலின் சிறப்புமிக்க
குடமுழுக்கு விழா 1976ஆம் வருடம் (4-4-1976) நடைபெற்றது.
அண்ணாமலையார் கோவிலின் கருவறைத்
தெய்வம
அருணாசலேஸ்வரர் என்ற சிவபெருமான் ஆவார். இறைவன்
கருவறையில் லிங்க வடிவில் காட்சி தருகிறார். அம்மன்
|