பக்கம் எண் :

88தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

உண்ணாமலை எனப்படுகிறார். அம்மன் கருவறை முழுவதும்
சென்ற நூற்றாண்டில் நகரத்தார்களால் புதுப்பிக்கப்பெற்றது.
அம்மன் சந்நிதிக்கு வெளியிலுள்ள மண்டபத்தில் அஷ்ட
லட்சுமிகள் உள்ள ‘அஷ்டலட்சுமி மண்டபம்’ உள்ளது. விநாயகர்
சந்நிதியும் கம்பத்து இளையனார் (முருகன்) சந்நிதியும்
இக்கோவிலிலுள்ள இதர முக்கிய சந்நிதிகளாகும்.

பகவான் இரமண மகரிஷி ஞானம் பெற்ற இடம்
இக்கோவிலினுள் இருக்கிறது. (மலையின் அடிவாரத்தில்
இரமண மகரிஷியின் ஆஸ்ரமம் உள்ளது).

அருணகிரிநாதர் பிறந்து, வளர்ந்து, தவம் புரிந்த
இடம் திருவண்ணாமலை என்று அறியப்படுகிறது.

கி.பி. 13ஆம் நூற்றாண்டில் விக்கிரம பாண்டியன் என்ற
பாண்டிய மன்னன் அண்ணாமலையார் கோவிலைச் சுற்றி வர
(கிரி பிரகாரம்) ஒரு வீதியை அமைத்தார். இது ‘விக்கிரம
பாண்டியன் திருவீதி’
எனப்பட்டது. 1976ஆம் வருடம் கிரி
வீதியில் மைல் கற்கள் மூன்று (Mile stones)
கண்டுபிடிக்கப்பட்டன. இக்கற்களில் பாண்டிய மன்னர்
விக்கிரமனின் பெயரும் மீன் முத்திரையும் செதுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வருடமும் நடைபெறும் கார்த்திகைத் தீப
விழா
அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் முக்கிய விழா
ஆகும்.

வட ஆர்க்காடு மாவட்டத்தில் போளூரிலிருந்து 10 கி.மீ.
தொலைவில் திருமலை உள்ளது. இங்குள்ள குன்றின் மேல்
சமண சமயத்தின் 22வது தீர்த்தங்கரரான நேமி நாதரின் பெரிய
திருவுருவம் வடிக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தின் உயரம் சுமார்
5 மீட்டர். “தமிழ்நாட்டில் உள்ள சமணத் திருவுருவங்களில்
இவ்வுருவமே பெரியது என்று கருதப்படுகிறது.”

திண்டிவனத்திற்கு மேற்கில் 18 கி.மீ. தொலைவில் மேல்
சித்தாமூர்
உள்ளது. இங்கு ஒரு அழகிய சமணர் கோவில்
உள்ளது. இது சிங்கபுரிநாதர் கோவில் எனப்படுகிறது.
சமண சமயத்தின் 23வது தீர்த்தங்கரரான பார்ச்சுவநாதரை
இக்கோவிலில்