அவர்கள் வாழ்ந்தவர்களாக இருந்திருப்பின் இவ் வொப்புமையைக் காண முடியாது. புத்த தத்தர், மணிமேகலைச் சான்றுகளைக் கொண்டும், அக் காலத்திய அரசியல், சமுதாய, சமய நிலவரங்களைக் கொண்டும் இவ்விரு காப்பியங்களும் கி.பி. 6ஆம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றப்பட்டவை என்றும், இரண்டாம் நூற்றாண்டில் எழுந்தனவல்ல என்றும், கி.பி. 8, 9ஆம் நூற்றாண்டுகட்கு மிகவும் முற்பட்டவை என்றும் ஒரு முடிவுக்கு வருவது இயைபுடைத்தாகும்.71 71. சேர நாட்டில் குணவாயில் கோட்டம் கி.பி. 9ஆவது நூற்றாண்டு தோன்றியதெனவும் அக் காரணத்தால் சிலப்பதிகாரம் கி.பி. 9 ஆவது நூற்றாண்டைச் சார்ந்ததென்றும் பேராசிரியர் நாராயணன் கூறியிருப்பது நம்பத்தக்கதன்று. திருச்சிராப்பள்ளிக்கடுத்த கரூரின் அண்மையில் ஒரு குணவாயூர் இருந்தது. இளங்கோவடிகள் அங்குச் சிலப்பதிகாரத்தை இயற்றியிருக்கலாம். |