பக்கம் எண் :

பண்டைத் தமிழரின் வாழ்க்கை 131

விளக்கிக் காட்டுமளவுக்குத் தமிழரிடையே இலக்கிய வளம் நிரம்பி இருக்க
வேண்டும்.

     நிலத்தைப் பாகுபாடு செய்ததைப் போலவே காலத்தையும் பாகுபாடு
செய்திருந்தனர். காலம், பெரும்பொழுது என்றும் சிறுபொழுது என்றும்
இருவகையாகப் பிரிக்கப்பட்டது.


     ஓராண்டின் தட்ப வெப்ப மாறுபாடுகளைக் காட்டிய கார், கூதிர்,
முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் ஆகிய காலங்கள்
பெரும்பொழுதுகள். காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை
ஆகியவை சிறுபொழுதுகள். பெரும்பொழுதை ஆண்டு, திங்கள், கிழமை,
நாள், நாழிகை, நொடி எனவும் பகுத்திருந்தனர்.