மேல் நீடித்தலாகாது.30 பரத்தையர் உறவை மேற்கொண்டு தன் மனைவியைப் பிரிந்து சென்றவனும் தன் மனைவிக்குப் பூப்புத் தோன்றி மூன்று நாள் கழித்துப் பன்னிரண்டு நாள் வரையில் மீண்டும் வந்து தன் மனைவியைக் கூட வேண்டும். ஆனால், கோவலன் கண்ணகியை விட்டுப் பிரிந்து நீண்ட நாள் மாதவியுடனே வாழ்ந்திருந்தான். சங்க காலத்திய கட்டுப்பாடு சிலப்பதிகாரக் கதை நிகழ்ந்த காலத்தில் தளர்ந்து விட்டது போலும். மருதத்திணை ஒழுக்கமாக இருந்து வந்த இவ்விழுக்கானது பிற்காலத்திலும் தமிழர் வாழ்வுக்குச் சீர்கேட்டை விளைத்து வந்துள்ளது. கல்வி கற்கவும், பொருளீட்டவும், மன்னனுக்காகத் தூது செல்லவும் கணவன் பிரியும்போது மனைவி அவனுடன் செல்லும் வழக்கம் இல்லை. பெண்கள் போர்ப் பாசறைகளில் தம் கணவனுடன் தங்கக்கூடாதென்றும் ஒரு மரபு இருந்து வந்தது.31 தான் காதலித்த ஒரு பெண்ணை மணக்க வாய்க்காத ஆண் மகன் சில சமயம் மடலேறுவதுண்டு. பனங்கருக்கினால் குதிரை ஒன்று செய்து அதன்மேல் அவன் ஏறி அமர்ந்து தன் காதலியின் வடிவந்தீட்டிய கொடி ஒன்றைத் தன் கையில் ஏந்திக்கொள்ளுவான். இந்த ஊர்தியைத் தெருத் தெருவாக இழுத்துச் செல்லுவார்கள். பனங்கருக்கினால் அறுப்புண்ட அவன் உடலில் குருதி வடியும். ஊராரும், பெண்ணின் பெற்றோரும் அவன் துயரைக் கண்டு இரக்கங்கொண்டு அப் பெண்ணை அவனுக்கே மணமுடிப்பார்கள். பெண்கள் மடலேறுதலில்லை.32 ஆனால், பிற்காலத்தவரான திருமங்கையாழ்வார் தலைவி ஒருத்தி பிரிவாற்றாமை மேலீட்டால் ‘காதல் கைமிக்கு மடலூரத் துணிந்தாள்’ என்று பாடுகின்றார்.32அ பண்டைய தமிழ் மக்கள் அளவற்ற இன்பத்துடன் இல்வாழ்வில் ஈடுபட்டனர். அதற்குச் சான்றுகள் பல சங்க இலக்கியத்தில் கிடைக்கின்றன. தொழில் புரிவதை ஆடவர் தம் உயிராக மதித்தனர். மகளிர் தம் கணவரைத் தம் உயிருக்கு நேராகக் கருதினர். சங்க காலப் புலவர்கள் இல்வாழ்க்கையைப் பற்றித் தீட்டியுள்ள பல அழகிய சொல்லோவியங்கள் சங்க 30. தொல். பொருள். கற்பியல், 49. தொல். பொருள். கற்பியல், 34. 32. தொல்.பொருள். அகத்திணை. 35 ; குறள், 1137. 32அ. திவ்யப், சிறிய திருமடல், பெரிய திருமடல். |