ஏற்பட்டன. குமாரவிஷ்ணு என்பவன் மிகவும் முயன்று காஞ்சிபுரத்தைக் கைப்பற்றினான் என்று வேலூர்ப்பாளையம் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.2 விஷ்ணுகோபனுக்கும் குமார விஷ்ணுவுக்கும் இடையிட்ட காலத்தில் நேர்ந்த குழப்பங்கட்குக் காரணம் காஞ்சிபுரத்தின்மேல் சோழன் செங்கணான் படை யெடுத்ததேயாகும். பல்லவர் பரம்பரையில் சிம்மவர்மன் என்பவன் சு. கி. பி. 436-ல் அரசுகட்டில் ஏறினான். இவனுடைய ஆட்சிக்குப் பிறகு இரண்டாம் சிம்மவர்மன் மணிமுடி தரித்துக் கொண்டான்.(கி.பி. 575). அவன் காலத்தில், தொடக்க முதல் இறுதிவரையில் நாட்டில் களப்பிரர் படையெடுப்பினால் கலகமும் கிளர்ச்சியும் குழப்பமும் மேலிட்டன. அவன் மகன் சிம்மவிஷ்ணு என்பவன் கி.பி. 6ஆம் நூற்றாண்டின் இறுதியில் அரசுரிமை ஏற்றான். பல்லவ காலத்திய இலக்கிய வளர்ச்சியும், பண்பாட்டு மேம்பாடும், அரசியல் விரிவும் சிம்மவிஷ்ணுவின் காலத்திலிருந்தே தொடங்குகின்றன. இவன் களப்பிரரையும் சேர, சோழ, பாண்டிய மன்னரையும், மாளவரையும், சிங்களவரையும் வென்று வாகை சூடினான் என்று காசக்குடிச் செப்பேடுகள் கூறுகின்றன.3 இவனுடைய அரசாட்சியானது தெற்கில் கும்பகோணம் வரையில் விரிவுற்று நின்றது. இவனுடைய அரசவைப் புலவரான பாரவி என்பார் ‘கிராதார்ச்சுனீயம்’ என்னும் வடமொழிக் காவியத்தை இயற்றினார். சிம்மவிஷ்ணுவின் உருவமும், இவருடைய பட்டத்தரசிகள் இருவரின் உருவமும் மாமல்லபுரத்தில் புடைப்போவியங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. சிம்மவிஷ்ணுவுக்குப் பிறகு அவன் மகன் முதலாம் மகேந்திரவர்மன் (சு. கி. பி. 600-630) பட்டத்துக்கு வந்தான். இவனுக்கு விசித்திரசித்தன் என்றொரு விருது பெயருமுண்டு. பல்லவர் பரம்பரையிலேயே புகழ் ஏணியில் ஏறி நின்ற முதல் மன்னவன் மகேந்திரன்தான். இவன் காலத்தில்தான் பல்லவ சளுக்கப் போர்கள் தொடங்கலாயின. பல்லவர்களுக்கும் கடம்பர்களுக்கு மிடையே நெருங்கிய நட்புறவு இருந்து வந்தது. சளுக்க மன்னனான இரண்டாம் புலிகேசியின் முன்னோர்கள் கடம்பரை வென்று அடிபணிய வைத்தனர். அதனால் கடம்பரின் நண்பர்களான பல்லவர்களுக்கும் சளுக்கர்களுக்கும் அடிக்கடி போரும் 2. S.I.I. II. P. 508. 3. S.I.I. II. Kasak. Cop. Pl. |