பெருமாள் கோயிலையும் இவன் எழுப்பினான். திருமங்கை யாழ்வார் இவன் காலத்தில் வாழ்ந்தவர். நந்திவர்மன் அறுபத்தைந்து ஆண்டுகள் அரசாண்டான். இவனுடைய அறுபத்தொன்றாம் ஆண்டில் பொறித்துக் கொடுக்கப்பட்ட பட்டத்தாள்மங்கலம் செப்பேடுகள் இவனுடைய தந்தையின் பெயர் இரணியவர்மன் என்றும், இவன் இளமையிலேயே முடிசூட்டப் பெற்றான் என்றும் தெரிவிக்கின்றன. இவனுடைய 21-ஆம் ஆண்டில் வெட்டிக் கொடுக்கப்பட்ட காசக்குடிச் செப்பேடுகள் இவன் சிம்ம விஷ்ணுவின் இளவல் என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பரமேசுவர போத்தராசாவின் நாட்டையே ஆண்டு வந்தான் என்றும் தெரிவிக்கின்றன. இரண்டாம் நந்திவர்மனின் உடன்காலத்தவனான கங்க மன்னன் ஸ்ரீபுருஷகொங்கணி மகாதிராசா என்பவன் (கி.பி. 725-78) இரண்டாம் விக்கிரமாதித்திய சளுக்கனுக்கு உடந்தையாகப் பல்லவ நாட்டின்மேல் படையெடுத்து வந்தான் (கி.பி. 731). வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள ஸ்ரீபுருஷமங்கலம் (இப்போது சீஷமங்கலம் என்று அழைக்கப்படுவது) இவன் பெயரில் ஏற்பட்டதுதான். போரின் தொடக்கத்தில் கங்க மன்னன் நந்திவர்மன்மேல் வெற்றிகண்டான்; பல்லவரின் கொற்றக் குடையையும், ‘பெருமானபு’ என்ற விருதையும் பறித்துக்கொண்டான். ஆனால், போர்களின் இறுதியில் முடிவான வெற்றி நந்திவர்மனுக்கே கிடைத்தது. ஆகவே, அவன் கங்கர்கட்குச் சொந்தமான கங்கபாடி - 6000 என்ற நிலப்பகுதியைக் கைப்பற்றித் தன் போர்த்துணைவன் பாண மன்னனுக்குத் தன் நன்றிக்கு ஈடாக அதை வழங்கினான். நந்திவர்மனுடைய படைத் தலைவனான உதயசந்திரன் விண்ணப்பம் செய்துகொண்டதன் மேல் மன்னன் பாலாற்றங்கரையின்மேல் இருந்த ஒரு கிராமத்தின் பெயர் குமாரமங்கல வெள்ளட்டூர் என்றிருந்ததை மாற்றி, அதற்கு ‘உதயசந்திர மங்கலம்’ என்று பெயரிட்டு, அங்கு அதர்மம் செய்தாரை ஒழித்து, அக் கிராமத்தை நூற்றெட்டுப் பிராமணருக்குத் தானம் செய்தான் என்று உதயேந்திரம் செப்பேடுகள் கூறுகின்றன.5 பிராமணருக்குத் தானம் செய்யப்பட்ட கிராமத்தில் ஏற்கெனவே குடியுரிமை பெற்றிருந்த பலருடைய உரிமைகள் விலக்கப்பட்டன என்ற பொருள்பட இச்செப்பேடுகள் கூறுவதால், அக் குடிகளின் அதர்மம் எவ்வாறு கண்டறியப்பட்டது, எவ்வாறு 5. S.I.I: II. No. 74. |