கொண்டும் அயல்நாட்டு வரலாற்று ஆசிரியர்கள் பண்டைய தமிழர்களைப் பற்றித் தத்தம் நூல்களில் கொடுத்துள்ள குறிப்புகளைக் கொண்டும் பண்டைய தமிழரின் வரலாற்றைப் பற்றியும், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றைப் பற்றியும், இயன்றவரை திருத்தமான பண்டைய வரலாறு ஒன்று வகுப்பது அரிதாகத் தோன்றவில்லை. தமிழக வரலாற்றைக் கீழ்க்காணுமாறு பகுத்துக் கொள்ளலாம்: வரலாற்றுக்கு முற்பட்ட காலம், சங்க காலம், பல்லவர் காலம், பாண்டியர் சோழரின் பேரரசுக் காலம், மத்திய காலம், பிற்காலம் என ஆறு காலங்களாக வரையறுத்துக் கொள்ளலாம். இப் பல்வேறு காலங்களில் வாழ்ந்துவந்த தமிழரின் வாழ்க்கை வரலாறுகளை ஆராய்ந்தறிவதற்கு நமக்கு உதவியுள்ளவை புதை பொருள்கள், சங்க இலக்கியங்கள், தமிழ்நாட்டைப் பற்றி அயல்நாட்டு வரலாற்று நூல்களில் காணப்படும் குறிப்புகள், புராணங்கள், சமய இலக்கியங்கள், கல்வெட்டுகள், நாணயங்கள், முஸ்லிம் வரலாற்று ஆசிரியர்களின் குறிப்புகள், பிரிட்டிஷ் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனிகள், அரசாங்கங்கள் ஆகியவற்றின் ஆவணங்கள், டச்சு போர்ச்சுகீசியப் பாதிரிகளின் நாட்குறிப்புகள், கடிதங்கள், அறிக்கைகள், புதுச்சேரி ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புப் போன்ற ஆவணங்கள் ஆகியவையாம். பிற்கால வரலாற்றிற்கு இந்திய விவரங்களின் ஆவணங்கள் மிகப் பயன்படுகின்றன. தமிழகத்தில் கோயில்களிலும் குகைகளிலும் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும் தீட்டப்பட்டுள்ள ஓவியங்களும் அவ்வக் காலத்து மக்களின் கலை வளர்ச்சியை எடுத்துக்காட்டுகின்றன. ஆகையால், வரலாறு எழுதும் முயற்சிக்கு அவை பெரிதும் துணைபுரிகின்றன. இலக்கியங்களும் புராணங்களும் அளிக்கும் சான்றுகளை விடப் புதைபொருள்களும், கல்வெட்டுகளும், நாணயங்களும் அளிக்கும் சான்றுகள் பெரிதும் நம்பத் தகுந்தவையாக உள்ளன. ஆனால், விரிவான வரலாறு ஒன்று எழுதுவதற்கு இவையும் போதுமானவை என்று கூறமுடியாது. தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளில் முப்பதினாயிரத்துக்கு மேற்பட்டவை இன்னும் பதிப்பிக்கப்படாமலே உள்ளன. அவை வெளியாகக் கூடிய செய்திகள் இப்போது தொகுக்கப்பட்டுள்ள செய்திகளுக்கு முரண்பாடாகவும், விளக்கங் கொடுக்கக்கூடியனவாகவும், கூடுதலான தகவல்கள் அளிக்கக்கூடியனவாகவும் இருக்கக்கூடும். நாணயங்கள் அளிக்கும் சான்றுகளும் முழுமை இருக்கக்கூடும். நாணயங்கள் அளிக்கும் சான்றுகளும் முழுமையானவையல்ல. பல நாணய வரிசைகட்குக் காலங்கணித்தல் |