பக்கம் எண் :

பல்லவர்கள் 203

நூல்கள் தோன்றின. வடமொழி நூலாசிரியர்கள் பலர் பல்லவராட்சியில்
மேம்பாடுற்றனர். பல்லவர்கள் தமிழையும் பேணி வளர்த்தனர்.
    

     தமிழகத்தில் ஆதியில் குடியேறிய பல்லவர்கள் காடு கொன்று
நாடாக்கினார்கள். பிறகு பல்லவர்கள் பரம்பரையை விளக்கம் செய்த
புகழ்பெற்ற வேந்தர்கள் மிகப் பெரிய ஏரிகளைக் கட்டியும், ஆற்றுக்கால்கள்
கோலியும் உழவுக்குப் பெரிதும் வளமூட்டி வந்தனர். காடுகளை வெட்டி
நாடாக்கினராகையால் பல்லவர்களுக்குக் காடுவெட்டி என்ற விருது ஒன்றும்