அதை ஓதுபவர்கள் ‘பந்தபாசம் அறுக்க வல்லார்கள்’ என்றும் அவர் அப் பதிகத்தில் உணர்த்துகின்றார். பெரிய புராணத்தில் சேர்க்கப்பட்டுள்ள நாயன்மார்கள் அறுபத்துமூவருள் சிலர் திருஞானசம்பந்தர் காலத்தவர். அவர்களுள் தலையாயவர் சிறுத்தொண்ட நாயனார் என்பவர். இவர் முதலாம் நரசிம்மவர்மனின் படைத் தலைவராகப் பணியாற்றி வாதாபியை முற்றுகையிட்டு இரண்டாம் புலிகேசியின்மேல் மாபெரும் வெற்றி கொண்டார் எனப் பலர் கருதினர். ஆனால், இவர் உண்மையில் முதலாம் பரமேசுவர வர்மனின் படைத்தலைவராவார். அப்போது அவருடைய பெயர் பரஞ்சோதி என்பதாகும். பிறகு அம்மன்னனுடைய வேண்டுகோளின்படி தம் பிறந்த ஊராகிய திருச்செங்காட்டங்குடியை அடைந்து தம் மனைவி வெண்காட்டு நங்கையுடன் மனையறம் நடத்தி வந்தார். இவர் காலத்தில் காபாலிகர், காளாமுகர், பாசுபதர் என்னும் சமயத்தைச் சேர்ந்த வைராகிகள் தமிழகத்திலும் உலவி வந்தனர் என அறிகின்றோம். ‘...விரிசடை விரதிகள் அந்தணர் சைவர் பாசுபதர் காபாலிகள் தெருவினிற் பொலியும் திருவாரூர் அம்மானே....’ என்று திருநாவுக்கரசர் பாடியுள்ளார்.1 அவர்கள் சக்தி வழிபாடு செய்பவர்கள்; தேவிக்கு நரபலி கொடுக்கவும் தம் உயிரையே அவளுடைய திருவடிகளில் சேர்ப்பிக்கவும் அஞ்சாதவர்கள். அத்தகைய வைராகி ஒருவர் சிறுத்தொண்டரை அண்மித் தமக்குப் பிள்ளைக்கறி சமைத்துப் போடவேண்டுமென்று கேட்டுக் கொண்டாராம். சிவவேடந் தரித்தவர்கள் யார் எதை விரும்பினாலும் மறுக்காது வழங்கும் வள்ளன்மை பொருந்திய சிறுத்தொண்டர் தம் குழந்தை சீராளனையே அரிந்து கறி சமைத்து வைராகிக்குப் படைத்ததாகவும், அவருடைய பரிவுக்கும், செயற்கரிய செயலுக்கும் இணை காணமுடியாத வைராகி மறைந்து விட்டதாகவும், வைராகியாக வந்தவர் சிவபெருமானே என்று கண்ட சிறுத்தொண்டரும் அவர் மனைவியாரும் அளவற்ற மகிழ்ச்சி கொண்டனரெனவும், சிவபெருமான் சீராளனை உயிர்ப்பித்துத் தந்ததுமன்றிச் சிறுத்தொண்டருக்கும் அவர் மனைவிக்கும் வீடுபேறு அளித்தனர் எனவும் பெரிய புராணம் கூறும். சமணர், பௌத்தர் ஆகிய இரு சமயத்தாருமே எல்லா உயிர்களையும் பொதுப்பட நோக்கி அவற்றினிடம் அன்பையும், அருளையும் காட்டுவதையே தம் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். தரையின்மேல் நடந்துபோகும் போது ஈ, எறும்புக்கும் 1. தேவாரம். 4 : 20 : 3 |