மேரூர்க் கல்வெட்டு8 ஒன்று குறிப்பிடுகின்றது. இவன் பாசனக் கால்வாய்கள் பல வெட்டி உழவின் வளர்ச்சியைத் தூண்டி விட்டான். இம் மன்னன் இரணியகருப்பம், துலாபாரம் பல புரிந்தான். பிராமணருக்குப் பல பிரமதேயங்கள் வழங்கினான். தில்லையம்பலத்துக்குப் பொன் வேய்ந்தான். தன் தந்தை ஆதித்தனைப் போலவே பராந்தகனும் சிவபெருமானுக்கெனப் பல கோயில்களை எழுப்பினான். பல துறைகளிலும் இவனுடைய செங்கோல் சிறப்புற்று விளங்கிற்று. பராந்தகனுக்குப் பிறகு முப்பது ஆண்டுகள் வரை, அதாவது முதலாம் இராசராசன் அரசுகட்டில் ஏறியவரையிலும் சோழ அரசில் ஒரு பெரும் குழப்பம் ஏற்பட்டது. இக் காலத்தில் நாட்டப்பெற்ற கல்வெட்டுகள் பலவும், பொறிக்கப்பட்ட அன்பில் செப்பேடுகளும் வரலாற்று நிகழ்ச்சிகளை இணைத்துச் சோழ மன்னரின் ஆட்சி வரிசையை அறுதியிடத் துணைசெய்கின்றன. பராந்தகனையடுத்துக் கண்டராதித்தன் பட்டத்துக்கு வந்தான். தமிழகத்து வரலாற்றில் புகழொளி வீசி விளங்கும் செம்பியன் மாதேவியே இவன் பட்டத்தரசியாவள். இவள் கட்டிய கோயில்கள் பல. இவளும் இவள் கணவனும் சேர்ந்து சைவ சமய வளர்ச்சிக்காகப் பல அரிய தொண்டுகள் புரிந்துள்ளனர். கண்டராதித்தன் பாடிய தோத்திரப் பாடல்கள் சில சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் ஒன்பதாந் திருமுறையில் வைக்கப்பட்டுள்ளன. இச் சோழ மன்னனின் வாணாள் இறுதியில் (கி.பி. 957) சோழப் பேரரசானது மிகவும் சிறியதொரு நாடாகச் சுருங்கி வந்துவிட்டது. அப்போது தொண்டை மண்டலம் முழுவதும் இராஷ்டிரகூடன் மூன்றாம் கிருஷ்ணனுக்கு உட்பட்டிருந்தது. கண்டராதித்தனை யடுத்து அவனுடைய இளவலான அரிஞ்சயன் அரியணை ஏறினான். அவன் இரண்டாண்டுகள் அரசாண்டான். அவனுக்குப் பிறகு அவன் மகன் இரண்டாம் பராந்தகன் என்னும் சுந்தர சோழன் முடிசூட்டிக் கொண்டான் (கி.பி. 957). இவன் வைதும்ப இளவரசி கல்யாணியின் மகன். இவனுடைய ஆட்சி கி.பி. 973 வரை நீடித்தது. தான் ஆட்சி பொறுப்புகளை ஏற்றுக்கொண்டவுடனே இவன் தன் இரண்டாம் மகனான இரண்டாம் ஆதித்தனுக்கு இளவரசு பட்டஞ்சூட்டினான். இவன் காலத்தில் தெற்கே பாண்டி நாட்டில் வீரபாண்டியன் ஆட்சி புரிந்து வந்தான். சிங்கள மன்னனான நான்காம் மகிந்தன் இவனுடன் நட்புறவு கொண்டிருந்தான். ஒருமுறை சோழன் கண்டராதித்தனை 9. Ep. Ind. Verse No. 28. |