இப் பாண்டியன் போரில் வென்று வீரமுழக்கம் செய்து கொண்டிருந்தான். அவனை ஒறுக்கும் நோக்கத்துடன் சுந்தர சோழன் பாண்டி நாட்டின்மேல் படையெடுத்துச் சென்றான். சோழருக்கும் பாண்டியருக்குமிடையே இரு பெரும் போர்கள் நிகழ்ந்தன. சேவூரில் நடைபெற்ற கடும்போரில் பாண்டியனின் யானைப் படைகள் சிதறுண்டு அழிந்து போயின. நூற்றுக்கணக்கான யானைகள் வெட்டுண்டு மாய்ந்தன. அவற்றின் குருதியானது போர்க்களத்தில் ஆறாகப் பாய்ந்தது. இளவரசன் கரிகாலன் என்னும் இரண்டாம் ஆதித்தன் ஆண்டில் இளைஞன் எனினும், தானும் போர்க்கோலம் பூண்டு மதயானையை இளஞ்சிங்கம் பொருதலைப் போலப் பாண்டிய மன்னனுடன் நேருக்கு நேராகக் கடும்போர் புரிந்தான்.9 அவன் தாக்குதலைத் தாங்கக் கூடாமல் பாண்டியன் துவண்டான். போர்க்களத்தினின்றும் புறமுதுகிட்டோடிச் சயாத்திரி மலைமுழை யொன்றில் ஒளிந்தான். ஆதித்தனின் சிறந்த வீரத்தைப் பாராட்டிச் சோழன் அவனுக்குப் ‘பாண்டியனின் முடிகொண்ட சோழன்’ என்றொரு விருதை வழங்கினான். சோழரின் படைகள் தாம் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து பாண்டி நாட்டுக்குள்ளும் நுழைந்தன. இவற்றின் தலைவர்களுள் கொடும்பாளூர்க் குறுநில மன்னன் பராந்தகன் சிறிய வேளான் என்பவனும் ஒருவன். பாண்டி நாட்டுப் படைகள் முறியடிக்கப்பட்டன. அவை மட்டுமன்றிப் பாண்டியருக்குத் துணை புரிய வந்த சிங்களப் படைகளும் சிதறுண்டு சிங்களத்தை நோக்கித் திரும்பி யோடின. அவற்றைத் துரத்திச் சென்ற சிறிய வேளான் இலங்கைத் தீவின் மேலும் படையெடுத்துச் சென்றான். ஆனால், அங்கு அவன் வெற்றி கண்டும் போரில் புண்பட்டு வீர மரணம் எய்தினான் (கி.பி. 965). இரண்டாம் ஆதித்தனேயன்றிப் பார்த்திவேந்திர வர்மன் என்ற பெயருள்ள சோழ மன்னன் ஒருவனும் வீரபாண்டியனை வென்று முடிகொண்டதாகத் தொண்டைமண்டலத்துக் கல்வெட்டுகள் சில தெரிவிக்கின்றன. இவனுக்குப் ‘பரகேசரி’ என்றும், ‘கோவிந்தராசமாராயர்’ என்றும் விருதுகள் வழங்கியதாகக் கல்வெட்டுச் செய்திகள்10 கிடைத்துள்ளன. இவனுடைய அரசியருக்கு ‘உடையார் தேவியார் வில்லவன் மகாதேவியார்’, ‘பெருமானடிகள் தேவியார்’, ‘தன்மப் பொன்னாராகிய திரைலோக்கிய மகாதேவியார்’ என்ற பட்டப் பெயர்கள் வழங்கி வந்ததாகத் தெரிகின்றன.11 இவற்றை நோக்கின் பார்த்திவேந்திர 10. S. I. I. III. No. 180; S. I. I. II. No. 186; S. I. I. III. No. 158. 11. S. I. I. No. 193; Ep. Rep. 17/1921. |