ஆதித்தவர்மனும் இரண்டாம் பரகேசரி ஆதித்தனும் வெவ்வேறானவர் அல்லர்; ஒருவரே என்று புலப்படுகின்றது. வீரபாண்டியனை எதிர்த்துப் போரிட்ட மற்றொருவன் கொடும்பாளூர் பூதிவிக்கிரமகேசரி என்பான். இவனுக்குக் கற்றளிபிராட்டி என்றும், வரகுணப்பெருமானார் என்றும் இரு மனைவியர் உண்டு. சுந்தர சோழனின் ஆட்சி பலவகையிலும் சிறப்புற்றிருந்தது. அவன் இராஷ்டிரகூடரிடமிருந்து சோழ நாட்டின் வடபகுதிகளை மீட்டுக் கொள்ளுவதிலேயே நோக்கமாக இருந்து இறுதியில் அவர்களுடன் போரிட்டுத் தொண்டைமண்டலத்தைத் தன் குடைக்கீழ் இணைத்துக் கொண்டான். காஞ்சிபுரத்தில் தன் பொன்மாளிகையில் அவன் உயிர் துறந்தான். அதனால் அவனுக்குப் ‘பொன்மாளிகைத் துஞ்சிய தேவன்’ என்று ஒரு பெயர் ஏற்பட்டது. அவனுடைய அரசியர் இருவருள் வான வன்மாதேவி என்பவள் மலையமான் பரம்பரையில் வந்தவள். இந்திய வரலாற்றிலேயே ஈடிணையற்ற சீரும் சிறப்பும் பெற்று ஓங்கிய முதலாம் இராசராச சோழனின் தாய் இவள். அவள் தன் கணவனுடன் உடன்கட்டையேறி உயிர் துறந்தாள். அவள் மகளான குந்தவை பிராட்டியார் தஞ்சைப் பெருவுடையார் கோயிலுள் அவளுக்காகச் சிலை ஒன்று எடுப்பித்துள்ளாள். மற்றொருத்தி சேர நாட்டினள். இவள் கி.பி. 1001 வரையில் உயிர் வாழ்ந்திருந்தாள். வீரசோழியம் என்னும் இலக்கண நூலின் உரையாசிரியர் சுந்தர சோழனுக்குப் புகழ் மாலைகள் சூட்டியுள்ளார்.12 இம் மன்னனுக்கும் தென்னாட்டுப் பௌத்த சங்கத்துக்கு மிடையில் தொடர்ந்து நட்புறவு வளர்ந்து வந்திருந்ததாகத் தெரிகின்றது. சுந்தரசோழனின் இறுதி நாள்கள் துன்பத்தில் தோய்வுற்றன. முதலாம் பராந்தகனின் இரண்டாம் மகனுக்குப் பரகேசரி மதுராந்தகன் உத்தம சோழன் என்றொரு மகன் இருந்தான். பராந்தகனின் மூன்றாம் மகனான அரிஞ்சயன் கால்வழி வந்தவன் இரண்டாம் ஆதித்தன். எனவே, இயல்பாகத் தனக்குக் கிடைக்க வேண்டிய அரசுரிமையை அவ்வாதித்தன் பறித்துக்கொண்டான் என்று எண்ணி எண்ணி மனங் கருகினான் உத்தம சோழன். திடுமென ஒரு நாள் ஆதித்த சோழன் கொலையுண்டு இறந்து விட்டான். தன் மகனின் அகால மரணத்துக்கு மனமுடைந்தவனாய்ச் 12. வீரசோழி, யாப், செய், 11, |