என்ற விருது ஒன்றை வழங்கினான். இவனுக்கு இராசராசனே ‘மும்முடிச் சோழன்’ என்றும், இராசராசப் பல்லவராயன்’ என்றும் விருதுப் பெயர்களைச் சூட்டியிருந்தான். உத்தம சோழனுக்குப் பல மனைவியர் இருந்தனரெனக் கல்வெட்டுகள் மூலம் அறிகின்றோம். அவர்களுள் உரத்தாயன் சொரப்பையார் என்பவள் பட்டத்தரசியாக விளங்கினாள். அவள் கன்னட நாட்டு இளவரசி போலும். அவளுக்கு அக்கிரமகா தேவியார் என்றும் மூத்த நம்பிராட்டியார் என்றும் வேறு பெயர்களும் உண்டு. இவையன்றி அவள் திரிபுவன மகாதேவியார் |