பக்கம் எண் :

262தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

என்ற விருதுப் பெயர் ஒன்றையும் ஏற்றிருந்தாள். உத்தம சோழனின் அரசிகள்
அனைவருமே கோயில்களுக்கு நிவந்தங்கள் அளித்துள்ளனர். உத்தம
சோழனுக்கு மதுராந்தகன் கண்டராதித்தன் என்று ஒரு மகன் இருந்தான்.
இவன் பிற்பாடு முதலாம் இராசராசன் காலத்தில் மிகவும் உயர்ந்ததோர்
அரசாங்கப் பொறுப்பில் அமர்த்தப்பட்டான்.