14. சோழர் காலத்தில் தமிழரின் சமுதாயம்
(கி.பி. 10ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை) சங்க காலத்து மன்னரைப் போலவே சோழப் பேரரசர்களும் திருமாலின் அவதாரங்களாகக் கருதப்பட்டு வந்தனர். நாட்டு ஆட்சியின் முழுப்பொறுப்பும் அவர்கள் கையிலேயே ஒடுங்கியிருந்தது. நாட்டின் எல்லைகளின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு அவர்களுடைய பெருமையும் விரிவடைந்து வந்தது. சோழ மன்னர்கள் தம்மைச் ‘சக்கரவர்த்திகள்’ என்றே மெய்க்கீர்த்திகளில் பெருமைப்படுத்திக் கொண்டனர். மன்னரின் இல்வாழ்க்கை இன்பகரமாகவும் பயனுள்ள வகையிலும் ஓடிக்கொண்டிருந்தது. அவர்கள் பெரிய அரண்மனைகளில் வாழ்ந்து வந்தனர். மன்னருக்கும் அவருடைய குடும்பத்துக்கும் பணி செய்வதற்கென்று பல ஊழியர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். அரசர்களுக்கு மெய்காப்பாளர்கள் பலர் தொண்டு புரிந்து வந்தனர். பல தொழில்களில் பெண்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். அரண்மனை நீராட்டு அறையிலும், மடைப்பள்ளியிலும் பெரும்பாலார் பெண்களே பணிபுரிவது வழக்கமாய் இருந்தது. அரண்மனைப் பணிப்பெண் களுக்கு அக் காலத்தில் பொதுவாக பெண்டாட்டிகள் எனப் பெயர் வழங்கி வந்தது.1 முதலாம் இராசேந்திரனின் சமையற்காரி ஒருத்தி ‘திருவமுதிடும் பெண்டாட்டி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளாள்.2 அகமுடையாள்,3 என்னும் சொல்லும் மணவாட்டி4 என்னும் சொல்லும் மனைவியைக் குறித்து நின்றன. இப்போது பெண்டாட்டி என்னும் சொல் மனைவி என்னும் பொருளில் வழங்கி வருகின்றது. அரண்மனைப் பணியாளருக்கெனத் தனி விடுதிகளும் தெருக்களும் அமைந்திருந்தன. அவ் விடுதிகளுக்கு ‘வேளம்’ என்று பெயர். அவற்றுள் சில அபிமானபூஷண தெரிந்த வேளம், உய்யக் 1. S. I. I. III. No. 110. 2. T. A. S. I. P. 161. 3. S. I. I. IV. No. 616. 4. S. I. I. VI. No. 507. 512. |