பக்கம் எண் :

421

              17. தமிழகத்தில் 13 முதல் 18ஆம்
                நூற்றாண்டுவரை சமூக நிலை


     தமிழகத்தில் பதின்மூன்று முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரையிலான
கால அளவில் மக்கள் சமுதாயத்தில் பல துறைகளிலும் ஏற்பட்டுள்ள
மாறுதல்களானவை நாட்டின் வரலாறு, மொழிவளர்ச்சி, அயலவரின்
தொடர்பும் அரசாதிக்கமும், கிறித்தவர் இஸ்லாமியருடனான உறவுகள்
ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புகொண்டுள்ளன. மன்னர்களும் மக்களும்
தொடர்ந்து கோயில்களுக்கும், மடங்களுக்கும், பிராமணருக்கும் தானங்கள்
அளித்து வந்துள்ளனர்.

     வலங்கை-இடங்கையினரின் பூசல்கள் ஓய்ந்தபாடில்லை. அரசர்கள்
அடிக்கடி அவற்றில் தலையிட்டு அவற்றைத் தீர்த்து வைக்கவேண்டிய
நெருக்கடியும் ஏற்பட்டுள்ளன.1

பிராமணர்கள்

     பிராமணர்கள் மன்னரிடமும், குறுநில மன்னரிடமும் சிறந்த
தொண்டர்களாகவும், வரும்பொருள் உணர்ந்தவர்களாகவும், திருவருள்
பெற்றவர்களாகவும் நடந்துகொண்டனர். சோழப் பேரரசர்களைப் போலவே
விசயநகரப் பேரரசரும், நாயக்கர்களும் பிராமணருக்குப் பேராதரவு
தந்துவந்தனர்.2 விசயரங்க சொக்கநாத நாயக்கன் திருவானைக்காச் சங்கர
மடத்துக்கு நிவந்தங்கள் அளித்துள்ளான்.3 அம் மடத்தில் சோறு, தோசை,
அதிரசம், சுகியன் ஆகியவை நிவேதனம் செய்யப்பட்டன.

     விசயநகரப் பேரரசரும், நாயக்கரும், போசளரும் தமிழகத்துடன்
அரசியல் தொடர்புகொண்ட பிறகு, தெலுங்கரும் கன்னடியரும்
ஆயிரக்கணக்கில் தமிழகத்தில் குடியேறினார்கள். அவர்களுள் பலர்
பிராமணர்கள். பிராமணர்கள் பெற்று வந்த

     1. S. I. I. II. No, 81.
     2. Ep. Rep. 96/42-43; Ep. Rep. 100/42-43.
     3. Ep. Ind. XVI. No. 12.