பக்கம் எண் :

தமிழகத்தில் 13 முதல் 18ஆம் நூற்றாண்டு வரை சமூகநிலை 423

பட்டன.6 இவ்வைந்து வகுப்பினர் ஒன்றுகூடல் (உடன்கூட்டம்) கூடாது என்று
ஓர் அரசாணை பிறந்ததுண்டு.7

     எண்ணெய் ஆடிய வாணியர் (செக்கார்)களுக்குள் பூசல்கள்
ஏற்பட்டதுண்டு. ஒரு முறை, அவர்கள் அதைத் தீர்த்துக் கொண்டு தமக்குள்
ஓர் உடன்படிக்கை செய்துகொண்டுள்ளனர்.8 வாணியர்கள் எள், இலுப்பைக்
கொட்டை, தேங்காய், ஆமணக்கு ஆகியவற்றினின்றும் எண்ணெய் எடுத்தனர்;
இலுப்பை நெய் கோயில் விளக்கெரிக்கவும் பயன்பட்டது. குயவர்கள்,
வண்ணார்கள், நாவிதர்கள் ஆகியவர்கள் தத்தம் குலத்தொழிலில் தொடர்ந்து
ஈடுபட்டு வந்தார்கள்.

     செட்டிகள் வாணிகம் செய்தார்கள். முஸ்லிம்களும் வாணிகத் தொழில்
செய்து வந்தார்கள். உழவுத் தொழில், தொழில்கள் யாவற்றினும்
தலையாயதாகப் போற்றப்பட்டு வந்தது. அரசாங்கத்துக்குக் கிடைத்த
வருமானத்தில் பெரும்பகுதி உழவர்களிடமிருந்தே திரட்டப்பட்டது. ஏனைய
கைத்தொழில்களும், மக்களின் குடிநலமும், வாழ்க்கைத் தரமும் உழவுத்
தொழிலின் அடிப்படையிலேயே வளர்ந்து வந்தன.

     கைக்கோளர்கள் தமிழரின் சமூகத்தில் கம்மாளர்களைப் போலவே
மிகவும் சிறப்பான இடம் பெற்றிருந்தனர். அவர்கள் ஏற்கெனவே கோயில்
பணிகளில் ஈடுபட்டிருந்தார்கள். கைக்கோளர் படை எனத் தனிப் படைகள்
வகுக்கப்பட்டிருந்தன. நாளடைவில் அவர்கள் நெசவுத்தொழிலில் ஈடுபட்டுக்
குடிமக்களுக்குப் பலவகையான துணிகளை நெய்து கொடுத்தார்கள்.
ஊர்தோறும் கைக்கோளர்களுக்கெனத் தனித் தெருக்களே அமைந்திருந்தன.9
கைக்கோளர்கள் நெய்துவந்த தறிகளுக்கு வரிகள் போடும் வழக்கம்
தொடர்ந்து காணப்படுகின்றது.10 பட்டடை மூலாயம் என்பது விசயநகர
மன்னர்கள் தறிகளின்மேல் விதித்த வரியாகும்.11

     கைக்கோளர்கள் பல்லக்கு ஏறிச் செல்லவும், தமக்கு முன்பு சங்கு
ஊதப்பெறவும் காஞ்சிபுரத்திலும் விரிஞ்சிபுரத்திலும் புதிய உரிமைகளைப்
பெற்றனர்.12 இவ் வுரிமைகளை வழுதலம் பட்டுக் கைக்கோளரும் வழங்கப்
பெற்றார்கள்.13 கைக்கோளருக்கு

     6. EP. Rep. 17/17; Ep.Rep. 23/17.
     7. Ep. Rep. 378/15.
     8. Ep. Rep. 1907-p. 16.
     9. Ep. Rep. 319/1911.
     10. Ep. Rep. 111/39-40.
     11. Ep. Rep. 272/1912.
     12. Ep. Rep. 162/18.
     13. Ep. Rep. 291/23.