தேவேந்திர குடும்பர் என்ற குலத்தினருக்கும் பறையருக்குமிடையே பெரும்பூசல் ஒன்று விளைந்தது. அதன் விளைவாகப் பறையர்கள் வெள்ளானை, வெண்குடை, கரடி (சிலம்பமாடுதல்), பகல் தீவர்த்தி, பாவாடை, இரு சிலம்புகள், இரு கொடுக்குகள் (இரு முன்றானையிலும் பூ வேலை செய்யப்பட்ட ஆடை), விழாக்களின்போது பதினாறுகால் பந்தல், பிணத்தைக் காடேற்றும்போது மூன்று தேர் உகைத்தல், பஞ்சவன் என்ற பட்டப் பெயர், பதினெண்வகை இசைக் கருவிகள் முதலியவற்றுக்கு உரிமை வழங்கப்பெற்றனர். அஃதுடன் அவர்களுக்கு ஒற்றைமாடி வீட்டில் வாழவும் உரிமை கிடைத்தது.37 பறைச்சேரி ஒன்றிலிருந்து கிடைத்த வருமானம் சிவன் கோயிலுக்குத் தானமாகக் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.38 தேவரடியார்கள் தேவரடியார்கள் கோயில் பணியில் ஈடுபட்டு வந்தனர். தாயும் மகளுமான பெண்மக்கள் இருவர், பொன்னமராவதி கோயிலுக்கு அடிமைகளாகத் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு கோயில் நிருவாகிகளிடம் பிழைப்பை நாடினர். நிருவாகிகள் அவர்களைக் கோயில் தேவரடியார்களாக அமர்த்திக்கொண்டு அவர்கட்கு வீடுகளும் நிலங்களும் வழங்கினர் என்று கல்வெட்டுச் செய்தி ஒன்று கூறுகின்றது.39 திருமெய்யம் தாலுக்காவில் ராங்கியம் என்னும் ஊரில் கோயில் நிருவாகிகளும் ஊராரும் உமையம்மை என்ற பெண் ஒருத்தியைத் தேவரடியாராக ஏற்றுக் கொண்டு அவளுக்கு ‘நாலு திக்கும் வென்ற மாணிக்கம்’ என்ற விருதுப் பெயரையும் நிலங்களையும் வீட்டையும் வழங்கினர்.40 தேவரடியார்க்குப் பாதங்களில் சூலக்குறிச் சூடுபோடும் வழக்கம் இருந்ததாகத் தெரிகின்றது.41 சில பழக்கவழக்கங்கள் கிராம தேவதைகளின் கோயில்களில் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கமானது பதினைந்தாம் நூற்றாண்டிலேயே இருந்து வந்ததற்குச் சான்று உண்டு. மேலைப் பனையூர்க் கல்வெட்டு ஒன்று42 ‘...கோனாட்டு நாச்சியார் திருநாளுக்கு நம்முடைய ஊரில் இடையன் பொன்னன் கோன் எழும்பன் நம்முடைய திருநாளுக்கு 37. Ep. Rep. 588/26. 38. Ep. Rep. 208/11. 39. I. P. S. No. 793 40. I. P. S. No. 814. 41. I. P. S. No. 841. 42. I. P. S. No. 692. |