பக்கம் எண் :

தமிழகத்தில் 13 முதல் 18ஆம் நூற்றாண்டு வரை சமூகநிலை 451

அக் கோயிலுக்குள் நடைபெற்றதுண்டு. ஒரு முறை ஆர்க்காட்டு நவாபு
ராஜாசாயபு தன் பின்னால் விட்டுவிட்டுப்போன பட்டாளம் ஒன்று
அண்ணாமலையார் கோயிலினுள் தங்கியிருந்தது. தியாகதுர்க்கம் கின்னேதாரன்
கிருஷ்ணாராவு என்ற மராத்தியன் - அவனும் ஓர் இந்துதான்- ஒருநாள் இரவு
திடீரென்று தன் படைவீரருடன் கோயிலுக்குள் புகுந்து எழுநூற்றைம்பது
சிப்பாய்களைப் படுகொலை செய்தான் ; கோயிற் சுற்றாலைகளை இரத்தத்தால்
மெழுகினான்.