சென்னையைச் சுற்றியுள்ள இடத்தைக் கோல்கொண்டாவின் முதலமைச்சன் மீர்ஜு ம்லா என்பவன் வென்று தன் நாட்டுடன் இணைத்துக் கொண்டான் (1647). அப்போது ஆங்கிலேயர் சென்னையில் பெற்றிருந்த உரிமைகள் அனைத்தையும் உறுதி செய்துகொடுத்தான். ஐந்தாண்டுகள் கழித்துக் கம்பெனியின் கிழக்கிந்திய நாடுகளுக்குச் செயின்ட் ஜார்ஜ் கோட்டையே தலைமை ஆட்சியிடமாகவும் அமைந்தது. அந் நிலை 1655-ல் மாறுபட்டதேனும் 1661-ல் மீண்டும் அக் கோட்டையே தலைமையிடமாய் அமைந்தது. கோட்டையில் வசித்து வந்த ஆங்கிலேயப் பெண் ஒருத்தி அடிமைப் பெண்ணைக் கொன்று விட்டாள். அதைத் தொடர்ந்து நேர்ந்த சில குமுறல்களின் காரணமாகக் கோட்டையில் ஏஜன்டாகப் பணியாற்றி வந்த ஜார்ஜ் பாக்ஸ் கிராப்ட் என்பார் அதன் முதல் கவர்னராக நியமிக்கப்பட்டார். சென்னையில் மக்கள் தொகையானது பெருகி வரலாயிற்று. அது 1670-ல் 40,000-த்தை எட்டி நின்றது. அடுத்த கவர்னராக வில்லியம் லேங்கார்ன் (1672-8) நியமனம் ஆனார். சென்னைப் பகுதியில் சிவாஜி படையெடுத்து வந்தபோது அவருடன் கவர்னர் நட்புறவுத் தொடர்புகளை மேற்கொண்டார். அவரும் அவரையடுத்துக் கவர்னர் பதவியில் அமர்ந்த சர் ஸ்டிரேஷ் நாம் மாஸ்டரும் (1678-87) செயின்ட் ஜார்ஜ் கோட்டையை மேலும் வலுப்படுத்தினர். நீதி நிருவாகம் சீரமைக்கப்பட்டது. கூடலூரிலும் பறங்கிப்பேட்டையிலும் 1681-ல் ஆங்கிலேயர்கள் குடியேறினார்கள். கவர்னருக்கு 1684-ல் கம்பெனியின் ‘பிரசிடென்டு’ என்ற பதவிப் பெயரும் அளிக்கப்பட்டது; சென்னை மேலும் மேலும் வளர்ச்சி பெற்று மிகப் பெரியதொரு நகரமாகக் காட்சியளித்தது. அதன் நிருவாகத்துக்காக நகராட்சி ஒன்று நிறுவப்பட்டது (1688). மேயர் ஒருவரும், பன்னிரண்டு உறுப்பினரும் (ஆல்டர்மென்னும்) நகராட்சியின் நிருவாகத்தை மேற்கொண்டனர். கோல்கொண்டாவானது முகலாயரின் ஆளுகைக்கு உட்பட்டுவிட்ட பின்பு ஆங்கிலேயரின் உரிமைகள் யாவும் முகலாய அரசால் மீண்டும் உறுதி செய்யப்பட்டன (1690). அவ்வாண்டிலேயே கூடலூருக்குத் தெற்கே செயின்ட் டேவிட் கோட்டை எழுப்பப்பட்டது. வரகுணராம குலசேகர பாண்டியன் என்பவன் கி.பி. 1613-ல் முடிசூட்டப் பெற்றுள்ளான். இவன் எம் முறையில் முன்னைய பாண்டியருக்கு உறவினன் எனத் தெரியவில்லை. இவன் வேள்விகள் இயற்றியவன் என அறிகின்றோம். அதனால் அவனுக்குக் குலசேகர சோமாசியார் என்றும் ஒரு பெயர் வழங்கிற்று. மற்றொரு பாண்டிய மன்னன் கி.பி. 1748-ல் |