அரசாண்டுள்ளான். அவனும் வேள்வி இயற்றியவன் போலும். அவன் தன்னை வரகுணராம பாண்டிய குலசேகர சிவ தீட்சிதர் என்று குறிப்பிட்டுக் கொண்டுள்ளான். பாண்டிய மன்னர்கள் பேரரசர்களாக வாழ்ந்திருந்து பிறகு குறுநில மன்னர்களாக மாறி, இறுதியில் மதுரை நாயக்கரின் கீழும், விசயநகரத்து வேந்தரின்கீழும் வெற்று ஜமீன்தாரர்களாக இழிவுற்றுத் தம் பண்டைய பெருமையை இழந்து மறைந்து போயினர். போர்ச்சுகீசியர் இந்தியாவுக்குள் முதன்முதல் அடியெடுத்து வைத்த ஐரோப்பியர் போர்ச்சுகீசியராவர். அவர்கள் வாணிகம் புரிந்து பொருளீட்டும் நோக்கத்துடனே நாட்டுக்குள் நுழைந்தனர். அவர்கள் பெரிதும் விரும்பி இந் நாட்டில் கொள்முதல் செய்த சரக்கு மிளகும் ஏனைய சம்பாரப் பொருள்களுமாம். ஐரோப்பியரின் ஊன் உணவுக்குச் சுவையூட்டவும், அதைப் பாத்திரங்களில் நிரப்பிப் பதனிட்டு வைக்கவும், மிளகு, இலவங்கம், ஏலக்காய் முதலிய நறுமணப் பண்டங்களும் ஐரோப்பியருக்குப் பெரிதும் தேவைப்பட்டன. போர்ச்சுகீசிய மாலுமி வாஸ்கோ-ட-காமா என்பவன் முதன் முதல் கி.பி. 1498-ல் கள்ளிக்கோட்டை வந்து நங்கூரம் பாய்ச்சினான். அவன் வகுத்த கடல்வழியே ஏனைய ஐரோப்பியரும் வந்து இந்தியாவுடன் கடல் வாணிகம் மேற்கொள்ளுவதற்கு ஏற்றதொரு நெடுஞ்சாலையாக உதவிற்று. வாணிகக் கப்பல்களைத் தொடர்ந்து போர்க் கப்பல்கள் வந்தன. வாணிகச் செல்வாக்கில் ஓடிய நாட்டம் காலப்போக்கில் நாடு பிடிக்கும் முனைப்பாக மாறிற்று. ஆதியில் நாட்டில் காலெடுத்துவைத்த வணிகர்களிடம் கிறித்தவ சமயத்தைப் பரப்பும் எண்ணமே எழவில்லை. போர்ச்சுகீசியரின் செல்வாக்கானது வெகு துரிதமாக வளர்ந்து வந்தது. அவர்கள் கேரளத்துக் கடற்கரையில் பல குடியிருப்புகளை அமைத்துக் கொண்டனர். அவர்களுடைய செல்வாக்கானது அங்கெல்லாம் வேரூன்றிக் கப்பும் கிளையும் விட்டுப் பரவலாயிற்று. தம் வாணிகச் செல்வாக்கை வளர்த்துக்கொள்ளவும், அரசியல் ஆதிக்கத்தைப் பெருக்கிக்கொள்ளவும், சமய வளர்ச்சியைத் தூண்டிவிடவும் போச்சுகீசியர்கள் மக்களுக்கு எவ்விதமான இன்னல்களையும் கொடுமைகளையும் விளைக்கவும் |