பக்கம் எண் :

ஐரோப்பியரின் வரவு 465

அவனுடைய படைத் தலைவர்கள் அவனைச் சமயத்தில் கைவிட்டு
விட்டார்கள். கையில் கிடைத்தது வாய்க்கு எட்டவில்லை. எனினும் டூப்ளே
கருத்தழிந்தான் அல்லன். அரசியல் சூழ்ச்சிகளை மேற்கொண்டு தனக்குத்
துணைப்பலம் திரட்டிக் கொள்ளத் திட்டமிட்டான். முராரி ராவையும், மைசூர்
    

வேந்தனையும் தன் சூழ்ச்சியில் சிக்க வைத்தான். தஞ்சாவூர் அரசனை
நடுநிலையில் நிற்குமாறு பணித்து அவனிடம் ஓர் ஒப்பந்தமும் செய்து
கொண்டான். டூப்ளே எடுத்த முயற்சியைத் தளரவிட மனமில்லாதவனாய்
மீண்டும் ஒருமுறை திருச்சிராப்பள்ளியை முற்றுகையிட்டான் (1752 டிசம்பர்).
முற்றுகை ஓராண்டு நீடித்தது ; ஆனால், வெற்றி என்னவோ அவனுக்குக்
கிடைக்கவில்லை.