பக்கம் எண் :

ஐரோப்பியரின் வரவு 469

கொண்டான். ஐதரலி மிகச் சிறந்த ஒரு வீரன்; நல்ல உடற்கட்டும்
நெஞ்சுரமும் வாய்ந்தவன். எழுதப் படிக்க அறியானாயினும் அவனுக்குப் பல
மொழிகள் பேசும் வல்லமையுண்டு. அரசாங்க நிருவாகத்திலும், போர்த்
தொழிலிலும் அவன் அளவற்ற ஆற்றல் வாய்க்கப் பெற்றிருந்தான். ஒரே
சமயத்தில் பல அலுவல்களைப் புரியும் திறமை ஐதரின் சிறப்புகளில்
ஒன்றாகும். அரசியல் நேர்மையும், சீரிய நோக்கமும் அவன் வாழ்க்கைக்குப்
பொலிவூட்டின. ஒழுக்க நெறிகளிலும், சமயச் சடங்குகளிலும் அவனுக்கு
எள்ளளவேனும் பற்றுதல் கிடையாது. ஆனால், அவன் இஸ்லாமிய மதத்தில்
ஆழ்ந்த ஈடுபாடுடையவனாக இருந்தான். அவன் நெஞ்சில் ஈரமும் இரக்கமும்
கிடையா. அவனுடைய பகைவருக்கும், அவன் பரிவை இழந்தவர்களுக்கும்
அவன் ஆற்றிய கொடுமைகள் கேட்போர் நெஞ்சைப் பிளக்கக் கூடியன.

     ஐதருக்குப் பின்னர் அவன் மகன் திப்பு மைசூர் சுல்தானாக முடிசூட்டிக்
கொண்டான். அவன் ஆங்கிலேயரிடம் அளவற்ற வெறுப்புக்
கொண்டிருந்தான். எனினும், பிரெஞ்சுக்காரரிடம் மாறாத நட்புக்
கொண்டிருந்தான். திப்பு சுல்தான் தன் ஆட்சியின் தொடக்கத்திலிருந்தே
ஆங்கிலேயருக்குத் தொல்லைகள் கொடுத்து வந்தான். பிரான்ஸ், பெர்சியா,
துருக்கி ஆகிய நாடுகளிடம் படைத்துணை நாடித் தூதுகள் அனுப்பி
வைத்தான் (1787). அவனுக்குப் படை அனுப்புவதாக அங்கிருந்து
மறுமொழிகள் வந்தன. எனினும், அவனுடைய உடனடித் தேவைக்கு வேண்டிய
படைப்பலம் கிடைக்கவில்லை. ஆனால், பிரெஞ்சுக்காரர்கள் திப்பு சுல்தானின்
படைகளுக்குப் பயிற்சி கொடுத்து வந்தனர்.

     திப்பு சுல்தான் திருவிதாங்கூரின்மேல் படையெடுத்தான் (1789).
திருவிதாங்கூர் அரசன் ஆங்கிலேயருடைய நட்பைப் பெற்றிருந்தான்.
ஆங்கிலேயருடைய நட்பு தனக்கு எச் சமயத்திலும் கிடைக்கும் என்ற
நம்பிக்கையில் வாழ்ந்து வந்தான். ஆகவே, சென்னையில் கிழக்கிந்தியக்
கம்பெனியின் பிரசிடென்டாகவும், கவர்னராகவும் இருந்த ஜே. ஹாலண்டு
(J.Hollond) என்பவனுக்குப் படைப்பலம் வேண்டி விண்ணப்பமும்
அனுப்பினான். ஆங்கிலேயர் அவ் வேண்டுகோளுக்கு உடனே செவி
சாய்க்கவில்லை; பராமுகமாக இருந்துவிட்டனர். நைஜாமும். மராத்தியரும்
திப்பு சுல்தானிடம் முக்கூட்டு உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொண்டனர்
(1790).

    மூன்றாம் மைசூர்ப் போர் இரண்டாண்டு நீடித்தது. கார்ன்வாலிஸ்
பிரபுவே தன் தலைமையில் பெரும்படை ஒன்றைச்