பக்கம் எண் :

பத்தொன்பதாம் நூற்றாண்டின் அரசியலும் தமிழகத்தின் சமூக நிலையும் 485

(Indian Criminal Procedure Code) ஒன்றும், இந்தியச் சாட்சியச் சட்டம்
(Indian Evidence Act) ஒன்றும் இயற்றப்பட்டன. இச் சட்டங்கள் அனைத்தும்
நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் தேசிய உணர்ச்சி வளர்ந்து வருவதற்கும்
வழிவகுத்துக் கொடுத்தன. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் ஒழுங்குமுறைச்
சட்டத்தின் (1833) கீழ் இந்திய மண்ணில் எந்த இந்தியனுக்கும், அவன் இன்ன
குலத்தினன், இன்ன சமயத்தினன், இன்ன இடத்தினன், இன்ன நிறத்தினன்
என்ற காரணத்தாலேயே அரசாங்கத்தின்கீழ்ப் பணி புரியும் உரிமை
மறுக்கப்படலாகாது என்று விதிகள் வகுக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தன.
இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டம் (1861) ஒன்றின்படி
சென்னையில் உயர்நீதிமன்றம் ஒன்று நிறுவப்பட்டது.

     மராத்தியரின் சூறையாடலும், சௌத் வரிக்கொடுமையும்,
பாளையக்காரரின் சுரண்டலும், ஊருக்கு ஒரு நீதி, குலத்துக்கு ஒரு நீதி என்ற
முறைகேடும் ஒழிந்தவுடனே மக்கள் வாழ்க்கையில் அமைதி நிலவலாயிற்று.
நீதியும் நேர்மையும் அவர்களுடைய உயிருக்கும் உடைமைக்கும் வேலியிட்டன.

நாணயங்கள்

     தமிழகத்தில் பலவகையான நாணயங்கள் புழக்கத்தில் இருந்து வந்தன.
நட்சத்திர வராகன்கள், சென்னை வராகன்கள், ஆர்க்காட்டு ரூபாக்கள், பொன்
மொகராக்கள், வெனீஷிய நாணயங்கள், பறங்கிப்பேட்டை மொகராக்கள்,
மைசூர் மொகராக்கள், வெள்ளி டாலர்கள், மராத்திய ரூபாக்கள், ஐதாரி
பொன் மொகராக்கள், ஐதாரி வராகன்கள், இராசகோபால் பணங்கள் ஆகிய
நாணயங்கள் மக்கள் கைகளில் நடமாடிவந்தன. சென்னையில் நடைபெற்று
வந்த நாணயம் அச்சிடும் சாலையில் (Mint) நட்சத்திர வராகன்கள், மதராஸ்
வராகன்கள், மதராஸ் பணங்கள், மதராஸ் துட்டுகள் அச்சிடப்பட்டன. கவர்னர்
மன்றோ காலத்தில் ஏற்பட்ட புதிய விதிமுறைகளின்படி இந் நாணயங்கள்
அனைத்தும் ஒழிக்கப்பட்டன. ரூபா நாணயம் ஒன்று மட்டும் புழக்கத்திற்குக்
கொண்டுவரப்பட்டது. பழைய வராகன் ஒன்றுக்கு மூன்றரை ரூபா வீதம்
செலாவணிவிகிதம் விதிக்கப்பட்டது.

     வாணிகத் துறைக்கு நாணய ஒழுங்குமுறை பெரிதும் பயனாயிற்று.
வாணிகம் நன்கு வளர்ந்து வந்ததாயினும் ஆங்கிலேயர் வகுத்த சில
விதிமுறைகளின் காரணமாக வாணிக இலாபமானது இந்தியக் குடிமக்களின்
கைகளில் தங்காமல் கடல் கடந்து சென்று