பக்கம் எண் :

பத்தொன்பதாம் நூற்றாண்டின் அரசியலும் தமிழகத்தின் சமூக நிலையும் 487

கடன்பட்டிருக்க வேண்டியுள்ளது என்று ஆங்கிலேயர் குறைபட்டுக்
கொள்ளுவது வழக்கமாக இருந்தது.

     வடஇந்தியாவில் 1857-ல் சிப்பாய்க் கலகம் என்று ஆங்கிலேய
வரலாற்று ஆசிரியர்காளல் இழித்துக் கூறப்பட்ட கிளர்ச்சி மூண்டெழுந்தது.
இதை முதல் சுதந்தரப் போராட்டம் என்று சிலர் கருதுகின்றனர்.
ஆயிரக்கணக்கான இந்தியரும் நூற்றுக்கணக்கான ஆங்கிலேயரும் அப்
போரில் கொல்லப்பட்டனர். ஆங்கிலேய அரசாங்கம் கடுமையான
நடவடிக்கைகளை மேற்கொண்டு அக் கிளர்ச்சிகளை ஒடுக்கிற்று. அடுத்த
ஆண்டு இங்கிலாந்தில் பால்மர்ஸ்டன் பிரபு (Lord Palmerston) முதல்
அமைச்சராக அரசாங்கத்தை மேற்கொண்டார். அவருடைய முயற்சியினால்
இந்தியாவில் சீரியதொரு அரசாங்கம் நிறுவும் நோக்கத்துடன் சீர்த்திருத்தச்
சட்டம் ஒன்று பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி வைக்கப்பட்டது.
அதன் பிறகு இந்திய அரசாங்கம் பல புரட்சிகரமான மாறுதல்களுக்கு
உள்ளாயிற்று. கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சிக்கு ஒரு முடிவு
கட்டப்பட்டது. இந்திய அரசாங்கத்துக்கு இங்கிலாந்தின் அரசியாகவிருந்த
விக்டோரியாவே பேரரசியானாள். இந்திய அரசாங்கமானது இங்கிலாந்தின்
நேர்முக ஆட்சிக்குள் கொண்டுவரப்பட்டது. பிரிட்டிஷ் அரசு இந்தியாவின்
பேரரசாக விரிவுற்றது. பேரரசின் மணிமுடியில் இந்திய நாடு நாயக மணியாக
ஒளிவீசிக் கண்ணைப்பறித்தது. உலக வரலாற்றுள் இதுவரை காணப்படாத
மாபெரும் பேரரசு ஒன்று உருவாயிற்று. பேரரசி விக்டோரியா அறிக்கை
ஒன்று வெளியிட்டாள் (1858 நவம்பர் 1ஆம் தேதி). இந்தியக் குடிகளுக்குப்
பல துறைகளிலும் முன்னேற்றம் காணக்கூடிய சீர்திருத்தங்களைத் தன்
அரசாங்கம் செய்ய முனைந்திருப்பதாகவும், இந்தியாவில் ஆங்காங்குச்
சுதந்தரமாக ஆண்டுவந்த மன்னரின் ஆட்சியிலோ, ஆட்சி வரம்பீட்டிலோ
தன் அரசாங்கம் தலையிடாதென்றும், சாதி, நிறம், சமயம் ஆகிய
வேறுபாடுகளை முன்னிட்டு அரசாங்கத்தில் பணிசெய்ய யாருக்கும் உரிமை
மறுக்கப்படாதென்றும் அவ்வறிக்கை எடுத்துக்கூறி, உறுதிமொழி யளித்தது.
இந்தியாவின் கவர்னர்-ஜெனரல் இந்தியாவில் அரசியின் பிரதிநிதியாகவும்
(Viceroy) செயல்பட்டார். கவர்னர்-ஜெனரலே இந்திய நாட்டின் ஆட்சித்
தலைவராக இருந்தது மட்டுமன்றிப் படைகளின் சேனாதிபதியாகவும்
செயல்பட்டார். அவருக்கு மந்தணம் கூறுவதற்கு நான்கு உறுப்பினர் அடங்கிய
குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவில் இந்தியக் குடிமகன் யாரும்
இடம்பெற முடியாமற்போனதைக் கண்டு மக்கள் மனம் புழுங்கினர்.
இந்தியாவிலேயே பிறந்து வாழ்ந்துவந்த பலகோடி மக்களின் வாழ்வுக்கு
வழிவகுக்கும்