பக்கம் எண் :

பத்தொன்பதாம் நூற்றாண்டின் அரசியலும் தமிழகத்தின் சமூக நிலையும் 503

என்னும் நூலைத் தழுவி எழுந்தது. இதன் பெயர் ‘இரட்சணிய யாத்திரிகம்’
என்பது. கிருஷ்ணபிள்ளை கம்பனின் இலக்கிய முறைகளைக் கையாண்டு
வெற்றி பெற்றிருக்கின்றார். தேவாரப் பாடல்களின் சாயையும், ஆழ்வார்கள்
பாடல்களின் அமைப்பும் இவர் பாடல்களில் காணலாம். மாயூரம் வேதநாயகம்
பிள்ளை யவர்கள் பல சமரசக் கீர்த்தனைகளையும், நீதிநெறிப் பாடல்களையும்
பல்வேறு இசையமைப்புகளில் பாடியுள்ளார். இன்றும் அவர் பாடல்கள்
இசையரங்கங்களிலும் வானொலியிலும் பாடப்பட்டு வருகின்றன.

மொழி ஆராய்ச்சி

     கால்டுவெல் (Robert Caldwell) என்ற கிறித்தவப் பாதிரியார்
அயர்லாந்து நாட்டிலிருந்து இந்தியாவுக்குச் சமயப் பணி செய்ய வந்தவர்.
திராவிட மொழிகள் அவருடைய கருத்தைக் கவர்ந்தன. அம் மொழிகளை
நன்கு ஆராய்ந்து அவற்றுக்கு ஒப்பிலக்கணம் ஒன்று எழுதினார். அவர்
காட்டிய வழியைப் பின்பற்றியே பின் வந்த மொழி ஆராய்ச்சியாளர்
அனைவரும் சென்றுள்ளனர். வின்ஸ்லோ என்பவர் தமிழில் மிகப்
பெரியதொரு தமிழ்-ஆங்கில அகராதி இயற்றியுள்ளார். யாழ்ப்பாணத்துக்
கதிரைவேற் பிள்ளையும் தமிழ்-தமிழ் அகராதி ஒன்று இயற்றி வெளியிட்டார்.

     தமிழ்மொழிக்குப் போப்பையர் செய்த மாபெரும் பணியைத் தமிழர்
என்றுமே மறவார்கள். அவர் திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகிய
நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கின்றார். தமிழின்
வளமையையும், பெருமையையும் ஆங்கில உலகத்துக்கு எடுத்துக்காட்டிய
சிறப்பு அவரையே சாரும். அவர் கிறித்தவர் ஆதலினாலும், சைவசித்தாந்த
நுண்கருத்துகளை நன்கு ஆய்ந்து அறியாதவர் ஆதலினாலும் அவருடைய
திருவாசக மொழிபெயர்ப்பில் சிற்சில இடங்களில் கருத்துப் பிறழ்ச்சிகள்
காணப்படுகின்றன. தம் கல்லறையின்மேல் தாம் ஒரு ‘தமிழ் மாணவன்’
என்னும் செய்தியைப் பொறிக்குமாறு விழைந்தாராம்; அவருக்குத் தமிழில்
அவ்வளவு ஆழ்ந்த பற்று இருந்தது. போப்பையர் தமிழில் மாணவர்க்கு
இலக்கணமும் ஐ. சி. எஸ். பயிற்சி பெற்றுவந்த ஆங்கிலேய மாணவர்கட்குத்
தமிழ்ப்பாடப் புத்தகங்களும் இயற்றியுள்ளார்.

     இலங்கையில் யாழ்ப்பாணத்துப் பிறந்த சில புலவர்கள் அரிய நூல்கள்
இயற்றியுள்ளனர். விசுவநாத சாஸ்திரியார் வண்ணக் குறவஞ்சி, நகுலமலைக்
குறவஞ்சி ஆகியவற்றைத் திறம்படப் பாடியுள்ளார். இருபொருள்படப்
(சிலேடையாகப்) பாடுவதில்