பக்கம் எண் :

504தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்

இவர் ஆற்றல் வாய்ந்தவர். சி. வை. தாமோதரம் பிள்ளை என்பவர்
தொல்காப்பியம், வீரசோழியம், இறையனார் அகப்பொருள், இலக்கண
விளக்கவுரை ஆகிய இலக்கண நூல்களையும், கலித்தொகை, தணிகைப்
புராணம், சூளாமணி ஆகிய இலக்கிய நூல்களையும் பதிப்பித்தார். கணபதி
ஐயர் என்பவர் அதிரூபாவதி நாடகம், அபிமன்னு நாடகம், அலங்காரரூபாவதி
நாடகம், மலையகந்தி நாடகம் முதலிய நாடகங்களை இயற்றியுள்ளார்.

     பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் சிறந்த நாடகங்கள் ஏதும்
வெளிவரவில்லை. பாமர மக்களுக்கெனப் பாரதம், இராமாயணம், பாகவதம்
ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட கதைகளும், அரிச்சந்திரன் கதையும்
கிராமப்புறங்களில் தெருக்கூத்துகளாக நடித்துக் காட்டப்பட்டன. இக்
கூத்துகள், கிராமத்தில் பொது இடங்களிலும், அம்மன் கோயில்களின் முன்பும்
இரவு முழுவதும், பொழுது விடியவிடிய நடைபெறுவதுண்டு. நாட்டுப்புறங்களில்
தெலுங்குக் கூத்துகளும் நடைபெற்று வந்தன.

திவ்விய ஞான சபை

     மக்கள் இதயங்களில் தேங்கித் தட்டுப்பட்டுச் சுருங்கிக் கிடந்த ஆன்மிக
உணர்ச்சியும், தத்துவ ஆராய்ச்சியில் ஏற்பட்ட வேட்கையும், பழங்
கருத்துகளில் புதிய உண்மைகளை நாடும் புத்துணர்ச்சியும் திவ்விய ஞான
சபையினால் (Thesophical Society) வெளிப்படுத்தப்பட்டன. இச் சபையை
அமைத்தவர்கள் பிளாவட்ஸ்கி அம்மையாரும், ஆல்காட் என்பவரும் ஆவர்.
இது முதன்முதல் அமெரிக்காவில் தோற்றுவிக்கப்பட்டது. பிறகு இது
அடையாற்றின் தென்கரைக்கு மாற்றப்பட்டது. டாக்டர் அன்னிப்பெசன்ட்
அம்மையார் இச் சபையின் நிருவாகத்தில் பங்கு கொண்டு ஐம்பதாண்டுகள்
இதன் தலைவராகப் பணியாற்றினார். சென்னையில் பல பேரறிஞர்கள் திவ்விய
ஞான சபையில் உறுப்பினரானார்கள். வேதம், உபநிடதங்கள், பகவத் கீதை
போன்ற வடமொழிச் சமய நூல்களைப் பயில்வதும், வழக்கற்று மறைந்துவந்த
அவற்றை மீண்டும் விளக்கி மக்கள் அனைவரும் அறியுமாறு செய்வதும் இச்
சபையின் நோக்கமாகும். இச்சபை சமரச நோக்கம் கொண்டது. பெரும்பாலும்
பிராமணரே இச் சபையில் சேர்ந்தனர். பிராமணர்கள் மட்டும் ஓதிவந்த
வேதங்களையும் மந்திரங்களையும் ஏனைய சில இந்துக்களும் கிறித்தவர்களும்,
முஸ்லிம்களும், பார்சிகளும் ஒருங்கே இணைந்து அமர்ந்து ஓதும் வகையில்
பழம் மரபுகளை மாற்றிய பெருமை அன்னிப்பெசன்ட்