தோட்டம், காசக்குடி, பாகூர், வேலூர்ப்பாளையம் ஆகிய இடங்களில் கிடைத்தவை. இவை ஏறத்தாழ கி.பி. 8, 9ஆம் நூற்றாண்டுகளைச் சார்ந்தவை எனலாம். இக்காலம் முதல், பாண்டிய சோழ சாசனங்களில் வட்டெழுத்துகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. சோழப் பரேரசு காலத்தில் தோன்றிய செப்பேட்டுச் சாசனங்கள் மிகப் பெரியவை. அவற்றுள் கூறப்படும் மெய்க்கீர்த்திகள் மிக விரிவானவை. இக்காலச் செப்பேடுகளில் மாபெரும் செப்பேடு திருவாலங்காட்டுச் செப்பேடேயாகும். செப்பேடுகள் பொதுவாக வாழ்த்துப் பாடல்களுடன் (மங்கள சுலோகங்களுடன்) தொடங்கின. அதைத் தொடர்ந்து, கொடையளித்தவரின் மெய்க்கீர்த்தி, அவரது பண்டைய அரச பரம்பரையின் வரலாறு ஆகியவை இடம்பெற்றன. அதற்குப் பின் நன்னொடையின் முழு விவரமும், நன்கொடை பெறுபவரின் முழுப் பெயரும், வரலாறும் குறிப்பிடப்பட்டிருந்தன. அவ்வறத்தினை அழித்தார் அடையும் இன்னல்களைக் கூறும் சாப வாசகங்களும் இடம்பெற்றன. கல்வெட்டுகளும் செப்பேடுகளும் நாட்டின் வரலாற்றிற்குப் பேருதவி அளிக்கும் அடிப்படை ஆதாரங்கள் எனலாம். மக்களிடமிருந்து அரசாங்கம் பெற்ற வரிகள், கோயில் அலுவலாளர்களின் தனித்தனி வேலைகள், கோயிலைச் சார்ந்த நகைகள், சொத்துகள் முதலியவற்றின் விவரங்கள் காணப்படுகின்றன. கல்வெட்டுகள் தூண்களிலும், சுவர்களிலும், கல்தளங்களிலும், தனிப் பாறைகளிலும் காணப்படுகின்றன. இசை பற்றிய ஒரு சிறந்த கட்டுரை முழுவதும் புதுக்கோட்டையிலுள்ள குடுமியான் மலைப்பாறை ஒன்றில் பொறிக்கப்பட்டுள்ளது. அது மிகவும் வியப்புக்குரியது. சில கல்வெட்டுகள் நினைவுச் சின்னங்களாக அமைக்கப்பட்டிருந்தன. தமிழகத்தில் ஏறக்குறைய 25,000 கல்வெட்டுகள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சில கல்வெட்டுகள் மன்னர்களின் செயல்களையும் கைங்கரியங்களையும் மிகைபடக் கூறியுள்ளன. களப்பிரர் காலம் முடிந்து பல்லவர்களின் ஆட்சி தொடங்கின பிற்காலத்தைப்பற்றிப் பல வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கத் தொடங்குகின்றன. வரலாற்றுத் தொடரும் ஒழுங்காக இடையீடின்றிச் செல்லுகின்றது. பல்லவர் காலத்திய கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள், குகைக்கோயில்கள், கற்றளிகள், ஏரிகள், |