தமிழகத்துப் பழக்கவழக்கங்களையும், வாழ்க்கை முறைகளையும் தாமும் மேற்கொண்டனர். தமிழகத்தில் தமிழர் யார், ஆரியர் யார் என்று பிரித்தறியலாகாவண்ணம் ஒரு சமுதாயம் உருவாயிற்று. காலப்போக்கில் தமிழகத்து ஆரியர் தாம் பேசி வந்த சமஸ்கிருதத்தையே மறந்துவிட்டனர் ; தமிழையே தம் தாய் மொழியாக ஏற்றுக்கொண்டனர். பிராமணருக்கு நாளடைவில் ஏற்பட்ட ஏற்றத்தையும் செல்வாக்கையும் நோக்கித் தமிழருள் சிலரும் தம்மையும் ஆரியர் என்றே கூறிப் பெருமை ஈட்டிக்கொண்டனர். ஆரியன் என்னும் சொல் ‘பெரியோன்’10, ‘ஆசாரியன்’11, ‘அறிவுடையோன்’12 என்னும் பொருளை ஏற்றது. ஆனால், திவாகரத்துக்குப் பிற்பட்டு எழுந்த பிங்கலந்தை நிகண்டு13 மட்டும் ஆரியரை மிலேச்சர் என்று கூறுகின்றது. அதற்குத் தக்க காரணம் இருக்கவேண்டும். அஃது ஆய்வுக்குரியதாகும். தமிழரின் அயல் தொடர்பை ஆயும்போது கிறித்தவ ஆண்டு தொடங்குவதற்கு முன்பு மூன்று நான்கு நூற்றாண்டுகளில் இப்பாரத நாடு முழுவதிலும் அரசியல் நிலைமை எவ்வாறு அமைந்திருந்தது என்று ஒரு சிறிது அறிந்துகொள்ளுதல் நலமாகும். வடக்கே கி.மு. 4ஆம் நூற்றாண்டில் மகதப் பேரரசராக விளங்கிய நந்தர்கள் தமிழகத்தின்மேல் படையெடுத்ததாகச் சில வரலாறுகள் கூறுகின்றன. நந்தரை யடுத்து மௌரியக்குடி மன்னர்கள் மகதப் பேரரசைக் கைப்பற்றி ஆட்சிபுரியத் தொடங்கினர். அக்காலத்தில் கோசர்கள் தமிழ் மன்னர்மேல் பகைமை பூண்டிருந்தனர். அவர்களுக்கு உடந்தையாக மோரியர் தமிழகத்தின்மேல் படையெடுத்து வந்தனர். ஆனால், மோகூர் மன்னன் பழையன் என்பவன் அவர்களை வெற்றியுடன் எதிர்த்து நின்று புறமுதுகிட்டோடச் செய்தான். அகநானூற்றுள் மாமூலனார் என்ற பழந்தமிழ்ப் புலவர் இச் செய்தியைத் தெரிவிக்கின்றார்.14 இவ் வகப்பாட்டுச் சான்றுகளினின்றும், அசோகரின் கல்வெட்டுச் செய்திகளினின்றும் மோரிய அரசு இக் காலத்திய சென்னைப்பட்டினம் வரையில் பரவியிருந்தது என அறியலாம். மோரியரின் தென்னாட்டுப் படையெடுப்பு வெற்றி பயக்கவில்லை. அவர்கள் கலிங்கத்தை தாக்காமல் விட்டதற்குத் தென்னாட்டில் தோன்றிய கடும் எதிர்ப்புதான் காரணம் என்பதில் ஐயமின்று. தமிழகத்தில் மன்னர்களின் கூட்டுறவு ஒன்று கி.மு. 10. இரேவண சித்தர் அகராதி நிகண்டு. 11. திருவாசகம் 1-64. 12. திவாகரம்- 13. பிங்கலந்தை நிகண்டு - 797. 14. அகம். 251, 281. |