‘கூடல் ஆலவாய்’ என்று குறிப்பிடுகின்றார்.7 ‘நன்பாட்டுப் புலனாய்ச் சங்கம் ஏறிநற்கனகக் கிழி தருமிக்கு அருளினோன்...’ என்று திருநாவுக்கரசரும் பாடியுள்ளார்.8 ஆகவே, இவ்விரு சமய குரவரும் சங்க காலத்துக்குப் பிற்பட்டவர்கள் என்பது திண்ணம். மாணிக்கவாசகர் கி.பி. 792 முதல் 835 வரை அரசாண்ட வரகுண பாண்டியனின் உடன்காலத்தவர். அவர் தம்முடைய திருக்கோவையாரில் ‘வான் உயர் மதில்கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழ்...’ என்று சங்கம் வளர்த்த தமிழைப் பாராட்டுகின்றார்.9 கூடல் என்ற பெயர் வாய்ந்த ஒரு நகரத்தில் அமர்ந்து தமிழாய்ந்த புலவர்கள் மதுரமான பாடல்களைப் பாடினராதலின் அந்நகரத்துக்கு மதுரை என்றொரு பெயர் வந்தது. இவ்வினிய பெயரே பிற்பாடு வழக்கில் நின்றுவிட்டதால் சொல் வழக்கில் கூடல் என்னும் பெயர் மறைந்து இலக்கியத்தில் மட்டும் காணப்படுகின்றது. முதல் எட்டுச் சைவத் திருமுறை ஆசிரியர்கள் கூடலைப்பற்றித் தம் பாடல்களில் குறிப்பிட்டிருக்கின்றனராகையால் கூடல் அல்லது சங்கம் அவர்களுடைய காலத்துக்குச் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்று மறைந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. சங்க இலக்கியங்கள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவை யல்ல என்பதற்கு அவ் விலக்கியங்களிலேயே அகச் சான்றுகள் கிடைக்கின்றன. சிங்களத்து மன்னனான கயவாகுவும் சேரன் செங்குட்டுவனும் உடன்காலத்தவர் என்பதற்குச் சிலப்பதிகாரம் சான்று பகர்கின்றது. இதைக்கொண்டு சேரன் செங்குட்டுவன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் விளங்கியவன் என அறிகின்றோம். காலத்தால் இம் மன்னனுக்கு முற்பட்ட சேர மன்னரைப்பற்றியும் பல பாடல்கள் சங்க இலக்கியத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. ஆகையால், சங்கப் பாடல்கள் பல கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பே இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்பது புலனாகின்றது. கிரீஸ், ரோம் ஆகிய ஐரோப்பிய நாடுகளுடன் பண்டைய தமிழகம் கொண்டிருந்த வாணிகத்தைப் பற்றி அகநானூறு, புறநானூறு, பட்டினப்பாலை ஆகியவையும், சற்றே பிற்காலத்து எழுந்த இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரமும் மணிமேகலையும் பல செய்திகளைக் கொண்டு மிளிர்கின்றன. ‘...யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும்...’10 என்றும், ‘யவனர் நன்கலந் தந்த தண்கமழ் தேறல் பொன்செய் புனை 7. தேவாரம் - 3 : 52 ; 1. 8. தேவாரம் - 6. 76-3 9. திருச்சிற்/23. 10. அகம்.49. |