பக்கம் எண் :

கற்பனை இன்பம்123

தம்   பெருமை   சொல்லவும்   அரிதே’   என்று    பாடிய   காலம்
பழங்காலம்.  இன்று  திருத்தொண்டர்களாகிய நாம் சோற்றுக்குத் தாளம்
போடுகின்றோம்.  நம்  திருவோடுகள் எல்லாம் வெறு ஓடுகளாய்விட்டன.
அன்னத்துக்கு    அலந்து    போய்விட்டோம்.    கட்டிக்   கொள்ளக்
கந்தைத்துணியும்  கிடைக்கவில்லை.   நம் தலைவன்-  பரமசிவன், நாம்
படும்  துயரத்தை யெல்லாம் அறிவார்.  அறிந்தும்  ஏனோ பாராமுகமாக
இருக்கின்றார்!  அவர்  இருக்கும்   இடம்   தேடி,  நாம் இப்பொழுதே
செல்வோம்.   அவரிடம்   என்ன  கேட்க  வேண்டும் என்பது நமக்குத்
தெரியும்.   நம்   திருவோடுகள்    ஒவ்வொன்றும்   அமுத  சுரபியாக
வேண்டும்.   பருத்திச்  செடிகள்   நாம்   தொடும்போதெல்லாம்  நாலு
முழத்தில்  நல்ல  ஆடை   தரவேண்டும்.  இவ்விரண்டும் - அன்னமும்
ஆடையும்  -  இப்பொழுதே  கிடைக்க   வேண்டும்.   இல்லாவிட்டால்
தீபாவளிக்குத்  தலைநாள் வேலை நிறுத்தம்  செய்வோம்.  இது உங்கள்
அனைவருக்கும்   சம்மதமாயிருக்கும்   என்று  நம்புகின்றேன்”  என்று
பேசி  நின்றார்.  அப்போது  அடியார்  எல்லாம் கைகொட்டி எழுப்பிய
பேரோசை கைலாசத்தை எட்டியது.

திருவோடு  எழுதிய கொடியைத் கையில் எடுத்து முன்னே சென்றார்.
சுந்தரமூர்த்தி.  பரமசிவனுடைய  இருப்பிடத்தை   நோக்கிப்  பண்டாரப்
படை  நடந்தது. ஒரு  பழங்காட்டினுள்ளே  இருந்தார்,  பரமசிவன். அக்
காட்டைக் காத்து நின்றான் நந்தி என்ற சேவகன்.

அவனைக்     கண்டு  வணங்கினார்.   சுந்தரம்;   திருத்தொண்டர்
சங்கத்தின்  தீர்மானங்களை   அவனிடம்   தெரிவித்தார்.  அது கேட்ட
நந்தி, “அப்பா  சுந்தரம்!  திட்டமெல்லாம்  சரியாய்ப்  போட்டுவிட்டாய்!