பக்கம் எண் :

168தமிழ் இன்பம்

‘பாடி     வந்த   பரிசிலன்   வாடிப்  பெயர்தல்  நாடிழந்ததனினும்
இன்னாதென்றெண்ணி,    தன்    தலையைக்    கொய்து   உன்னிடம்
கொடுக்குமாறு   இவ்  வாளைத்  தந்தான்’   என்று   கவிஞர்  கல்லும்
கரைந்துருகும்  கனிந்த  மொழிகளைக்  கூறிய  பொழுது,   அமணனது
உள்ளம்  நெகிழ்ந்தது;  கண்கள்  பாசத்தால்  நேசத்  தாரைகள் சொரிய
நின்றான்;  தலையாய  வள்ளலைக்  கானகத்தில்  வருந்த வைத்த  தன்
சிறுமையை    எண்ணி    ஏங்கினான்;    அப்பொழுது    நால்வகைச்
சேனையோடும் நகர மக்களோடும் தமையன் வசித்த  கானகம்  போந்து,
அப்  பெருந்தகையின்   அடிபணிந்து,  மீண்டும்  நாட்டிற்கு  அழைத்து
வந்தான்.   குமணனும்    முன்போலவே   அறிஞர்க்கும்  வறிஞர்க்கும்
ஆதரவாய் அமைந்து என்றும் அழியாத பெரும் புகழ் எய்தினான்.