பக்கம் எண் :

206தமிழ் இன்பம்

என்று     கொதித்துக் கூறினான்.  அப்போது  “அறநெறி    யுணர்ந்த
தருமனது   உரைவழி   நிற்றலே   தக்கதாகும்”    என்று   கண்ணன்
எடுத்துரைக்க, வெம்மை சான்ற வீமனும் அடங்கி நின்றான்.

அப்பால்,     போர்  நிகழ்ந்த  போது மானத்தால் மனம் கொதிக்க
தம்பியைத்    துணைக்கொண்டு    அயோத்தி    மன்னன்   இலங்கை
வேந்தனை  வென்றான்.  செம்மை    தவறிய சுயோதனன் செயல்கண்டு
சிந்தையறிந்த  தம்பியரைத்     துணைக்கொண்டு,  குருகுல  வேந்தனும்
மாற்றாரை   வென்றான்.   அறம்   திறம்பாத    இவ்வரசர்  இருவரும்
பொறுமை   யென்னும்    பெருமைக்கோர்  இருப்பிடமாய்  இலங்கினர்;
மாற்றார்  சிறுமை     செய்யினும்  அச் சிறுமையைத் தம் பெருமையாற்
பொறுத்து   அற நெறியில் தலை நின்றனர்; பகைவரது மிகையால் போர்
செய்ய     நேர்ந்தபோதும்,   அறம்   திறம்பாத   முறையில்   அமர்
நிகழ்த்தினர்.

படைக்கல     மிழந்து எளியராய்   எதிர்ப்படும் பகைவரை, அருள்
வாய்ந்த   அரசர்,   எஞ்ஞான்றும்   தமது   படைக்கலத்தால்  நலியச்
செய்வதில்லை.  வெள்ளி  மாமலை   யெடுத்த   இராவணன் படைக்கல
மிழந்து,  எளியனாய்த் தனக்கு  எதிரே  போர்க்களத்தில்  நிற்கக் கண்ட
கோசல நாட்டு வள்ளல், அருள் அளாவிய ஆண்மையோடு,

“ஆளை யாஉனக் கமைந்தன
   மாருத மறைந்த
பூளை யாயின கண்டனை
   இன்றுபோய்ப் போர்க்கு
நாளை வாவென நல்கினன்”