பக்கம் எண் :

மேடைப் பேச்சு21

முதல்   நாள்  நடந்த  போரில்   தமையனை  இழந்தாள்    மறுநாள்
நடந்த    போரில்    கணவனை    இழந்தாள்;    பின்னும்    போர்
ஒழிந்தபாடில்லை.  அவள்  குடும்பத்தில் சிறு பையன் ஒருவனே எஞ்சி
நின்றான்.    முன்னே    இறந்தபட்ட  தலைவனையும்  தமையனையும்
நினைந்து   அவள்   தளர்ந்தாள்  அல்லள்;    அருமந்த பிள்ளையை
அன்போடு    அழைத்தாள்;    வெள்ளிய     ஆடையை  உடுத்தாள்;
தலையைச்   சீவி   முடித்தாள்;  வேலைக்   கையிலே   கொடுத்தாள்;
போர்க்களத்தை   நோக்கி  அவனை  விடுத்தாள்;  இவ்வீர மங்கையை
ஒக்கூர்     மாசாத்தியார்     என்னும்    பெண்    புலவர்  வியந்து
பாராட்டியுள்ளார்.

மக்கள் வாழ்க்கை நலம்

இனி,     அந்   நாளில்   தமிழ்   நாட்டில்   வாழ்ந்த  மக்களின்
வாழ்க்கையைக்   குறித்துப்   புறநானூறு   பல  செய்திகள் கூறுகின்றது.
‘மன்னன்   எவ்வழி   மன்னுயிர் அவ்வழி’ என்றவாறு, முற்கால மக்கள்
மன்னனையே   பின்பற்றி   நடக்க  முயன்றார்கள். அரசன் கடமையை
அறிவிக்கின்ற     புறநானூற்றுப்    பாட்டு    ஒன்று   இக்கருத்தைக்
குறிக்கின்றது.   பிள்ளையைப்  பெற்று   வளர்ப்பது   தாயின்  கடமை
என்றும்,   அவனை   அறிவுடையவன்  ஆக்குவது தந்தையின் கடமை
என்றும்,   ஒழுக்க   நெறியில்  நிறுத்துவது  அரசன்  கடமை என்றும்
பொன்முடியார்  என்ற  புலவர்  திறம்படப்  பாடியுள்ளார்.

அரசன்     அறநெறி  தவறாதவனாய் ஆண்டு வந்தால் குடிகளுக்கு
எவ்வகைக்   கவலையும்    இல்லை    என்பதும்,   அவன்  அறநெறி
தவறினால், மழை பருவத்திற் பெய்