பக்கம் எண் :

222தமிழ் இன்பம்

அடிகள்   உருகுவாராயினர்.  கடந்தோர்க்கும்  கடத்தலரியதாய  மக்கட்
பாசம்  நீத்த   ஒரு   தொண்டர்.  பெரிய  சிறுத்தொண்டராய்ப்  பேறு
பெற்றார்.   மனையாள்மீது  வைத்த பாசம் துறந்த மற்றொரு தொண்டர்
இறைவனது   அன்பிற்குரியராயினர்.   கண்ணிற்  சிறந்த  உறுப்பில்லை
என்றறிந்தும்   ஈசன்பால்   வைத்த  அன்பினால்,  இரு  கண்களையும்
ஈர்த்தளிக்க  இசைந்த  ஒரு தொண்டர் மாறிலா இன்பத்தில் மகிழ்ந்தார்.
இவ்வாறு   அகம்    புறமென்னும்    இருவகைப்  பற்றையும்  அறவே
களைந்து,   இறைவன்பால்   அன்பை  வளர்த்த  அடியாரது  நிலையை
நினைந்து   பட்டினத்தடிகள்   உருகும்   பான்மை  அறிந்து  போற்றத்
தக்கதாகும்.

காளத்தி     வேடனைக்    குறிக்கோளாகக்   கொண்டு   அடிகள்
கரைந்துருகியவாறே,   கங்கைவேடனை  இலக்காகக்  கொண்டு,  வானர
வேந்தனான   சுக்ரீவன்    வாடி    வருந்தினான்.  இருமையும்  தரும்
பெருமானாகிய  இராமனிடம் எப்  பயனையும்  கருதாது விழுமிய அன்பு
பூண்ட  வேடனது  பெருமையையும்  தனது  சிறுமையையும் நினைத்துச்
சுக்ரீவன்  சிந்தை  தளர்ந்தான்.  வானர சேனை இலங்கை மாநகர்ப்புறம்
எய்தியபோது,   அப்படையின்   திறன்  அறியுமாறு தன் நகரில் நின்று
நோக்கிய   இலங்கை  வேந்தனைக் கண்டான் வானர மன்னன்.  அவன்
உள்ளத்தில்   சீற்றம்    பொங்கி   எழுந்தது;    பஞ்சின்   மெல்லடிப்
பாவையாகிய    சீதையை    வஞ்சனையாற்  கவர்ந்து,  சிறை  வைத்த
அரக்கர்    கோனைக்    கொன்று  பழி  தீர்க்கக்  கருதி,  அவன்மீது
பாய்ந்தான்.     வீரராகிய   இருவரும்   நெடும்பொழுது    கடும்போர்
விளைத்தார்கள். இலங்கைநாதனது