பக்கம் எண் :

230தமிழ் இன்பம்

தென்னாட்டில்   அத்   தகைய   நாடு   ஐயாறு  என்று   அழைக்கப்
பெற்றது.  திருவையாறு   என்பது   இப்போது  ஓர்  ஊரின்  பெயராக
அமைந்துள்ளது. பஞ்சநதம் என்பதும் அதுவே.

எல்லாம்      வல்ல இறைவனை வைத்தியநாதன் என்னும் பெயரால்
வழிபடும்  வழக்கம்   வடநாட்டிலும்   உண்டு; தென்னாட்டிலும் உண்டு.
சிதம்பரத்திற்கு  அருகே   வைத்தீஸ்வரன்  கோயில் என்ற  சிவஸ்தலம்
இருக்கின்றது.  அங்குள்ள  ஈசன்  “மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான்” என்று பாடினார் திருநாவுக்கரசர்.

வடநாட்டிலும்    வைத்தியநாதன்  கோயில் ஒன்று உண்டு. அதனை
இந்  நாளில்   உலகறியச்   செய்து விட்டனர். அங்குள்ள பண்டாக்கள்.
சில  நாட்களுக்கு   முன்பு   தாழ்ந்த  குல மக்கள்  என்று கருதப்படும்
அரிஜன    அடியார்களோடு   வைத்திய  நாதனை  (பைத்திய  நாதன்
என்பது   வடநாட்டு  வழக்கு.)   வழிபடச் சென்றார் விநோபா அடிகள்.
அடிகளையும்    அடியாரையும்   தடியால்  அடித்துத்   துன்புறுத்தினர்
கோயிற்   பண்டாக்கள்.    அவர்கள்    செய்த   சிறுமையால்  இன்று
வைத்தியநாதன் கோவிலை உலகம் அறிந்து கொண்டது.

இங்ஙனம்      பல்லாற்றாலும்   ஒருமையுற்று   விளங்கும்  பாரதப்
பண்பாட்டை   ஒல்லும்    வகையால்  பேணி  வளர்த்தல்  நல்லறிஞர்
கடனாகும்.