சிவத்து ரோகமும் நீங்கிய நாடு முக்க ணான்விளை யாடிய நாடு முதிய நான்மறை பாடிய நாடு மைக்க ணாள்குழல் வாய்மொழி பாகர் வசந்த ஆரியர் நாடெங்கள் நாடே” “எனது நாடு நன்னாட்டின் முன்னாட்டும் நாடு; விண்ணோரும் விரும்பி வரும் நாடு; எத் திசையும் புகழ் மணக்க இருந்திலங்கும் நாடு; நீங்காத வல்வினையும் நீங்கிய நன்னாடு; அரனார் விளையாடிய திருநாடு; ஆரணம் பாடிய அருமை சான்ற நாடு; இத் தகைய பழம்பெருமை உனது நாட்டுக்கு உண்டோ?” என்று அளவிறந்த மகிழ்ச்சியால் ஆடிப் பாடினாள். இப்பாட்டில் அமைந்த நாட்டின் பெருமையை நன்றாகக் கேட்ட பொதிய மலை மாது, புன்முறுவல் பூத்துத் தன் மலையின் பழம் பெருமை கூறத் தொடங்கினாள்: “மந்தமா ருதம்வளரும் மலையெங்கள் மலையே வடகலைதென் கலைபயிலும் மலையெங்கள் மலையே கந்தவேள் விளையாடும் மலையெங்கள் மலையே கனகநவ மணிவிளையும் மலையெங்கள் மலையே இந்தமா நிலம்புரக்கும் அங்கயற்கண் அம்மை இன்பமுறும் தென்பொதிய மலையெங்கள் மலையே! |