பக்கம் எண் :

மேடைப் பேச்சு49

யில்     மிகவும் ஈடுபட்டவன்;   போர்   ஒழிந்த   காலங்களில் தமிழ்
இசைவாணரொடும்      கலைவாணரொடும்     பழகி    இன்புற்றவன்.
அவனுடைய   தேவியர்களில்  ஒருவர்   ‘ஏழிசை  வல்லபி’   என்னும்
சிறப்புப்   பெயர்   பெற்று  விளங்கினார்.  இன்னிசையின் சுவையறிந்த
மன்னவன்  இசைக்  கலையின்  நயந்தெரிந்த  ஒரு நங்கையை மணந்து,
ஏழிசை   வல்லபி    என்னும்    சிறப்புப்   பெயரையும்   அவளுக்கு
அளித்தான் என்று தோன்றுகிறது.

இவ்வாறு   பல துறைகளிலும் புகுந்து தமிழ் மக்களின் வாழ்க்கையை
இன்புறுத்திய   இசைத்   தமிழ்,    இக்காலத்திலே   நாட்டுப்   பற்றை
வளர்ப்பதற்கும்,  அரசியல்  அறிவைப்  பரப்புவதற்கும் பயன்படுகின்றது.
இந்த  வகையில்   வழி   காட்டியவர்  ‘பாட்டுக்கொரு  புலவன்’ என்று
பாராட்டப்படுகின்ற  பாரதியாரே  ஆவார். இந்நாட்டில் வழங்கிய பழைய
இசைப்பாட்டு  வகை   பாரதியார்  கவிதையிலே மிளிர்கின்றது. இந்நாடு
சுதந்திரம்   அடைந்த   பொழுது  மக்கள்  எல்லோரும் பாடிய பாட்டு,
“ஆடுவோமே   பள்ளுப்   பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து
விட்டோமென்று  ஆடுவோமே”   என்பது.   இந்தப் பாட்டு பழங்காலப்
பள்ளுப்   பாட்டைத்    தழுவி    எழுந்தது   என்பது  சொல்லாமலே
விளங்கும். இன்னும்,  “பண்டாரப் பாட்டு”  என்று பாரதியார் பாடியுள்ள
 “அச்சமில்லை    அச்சமில்லை   அச்சமென்ப   தில்லையே”   என்ற
வீரப்பாட்டு, ஆயிரம் ஆண்டுகளுக்கு  முன்னே திருநாவுக்கரசர்  பாடிய
“அஞ்சுவது  யாதொன்றும்  இல்லை;  அஞ்ச வருவது மில்லை”  என்று
வீரப்பாட்டை  அடியொற்றிச்   செல்வதாகும்.  இங்ஙனம்  பழைய இசை
மரபுகளைப்