7, சித்திரை பிறந்தது* தமிழ்நாட்டில் கூனியாகிய பங்குனி மாதம் கழிந்தால் எங்கும் மங்கல ஒலி. “கூனி குடி போகாதே; ஆனி அடி கோலாதே” என்பது பழமொழி. இப்படிக் கூனியும் ஆனியும் கூடாவென்று கருதும் தமிழர், சித்திரையைச் சிறந்த ஆர்வத்தோடு வரவேற்கின்றார்கள் ; தமிழ் ஆண்டுப் பிறப்பை அதன் தலைநாளில் அமைத்துக்கொண்டாடுகின்றார்கள் ; அந்நாளைப் புனித நாளாகப் போற்றுகிறார்கள். அதன் காரணம் என்ன? சித்திரை மாதத்தில் இளவேனிற் காலம் தொடங்குகின்றது. வசந்தம் என்னும் இளவேனில் இன்ப சுகம் தரும் காலம். அப்போது, பசுமையான செழுஞ்சோலை பார்க்கு மிடமெங்கும் கண்ணுக்கு விருந்தளிக்கும். மாஞ்சோலை மெல்லிய தளிராடை புனைந்து இலங்கும் ; வேம்பின் கொம்பிலே பூத்த சிறு வெண்மலர்கள் புதுமணம் கமழும்; தென்னை மரங்கள் இனிமையான இளநீரைத் தரும் ; பனை மரங்கள் சுவையான பதநீரைக் கொடுக்கும். வசந்தகாலம் பிறந்ததென்று மகிழ்ந்து, பசுங் கிளிகள் மொழி பேசி, மரக்கிளைகளிலே கொஞ்சிக் * ‘பாரத தேவி’ யின் சித்தரை மலரில் எழுதியது. |