பக்கம் எண் :

இயற்கை இன்பம்61

சோலையில்  புகுந்து  தமிழ்  மணத்தையெல்லாம்     தமிழ்த் தென்றல்
வாரி  வழங்கும்    என்று தமிழகம் எதிர் பார்க்கின்றது. தென்றல் வீசும்
காலத்தில்,  ‘பிரிந்தவர்   பொருந்துவர், பிணக்கமுற்றவர் இணக்கமுறுவர்;
ஊடி நின்றவர்கூடி  மகிழ்வர்’ என்பது தமிழர் கொள்கை.

“ஊடினீர் எல்லாம் உருவிலான் தன்ஆணை
கூடுமின் என்று குயில் சாற்றும்”

என்பதாகச்    சிலப்பதிகாரம்   கூறுகின்றது.  எனவே, தமிழ்த் தென்றல்
தமிழர்   இனத்திலே,     பிரிந்தவரைப்  பொருத்தும்;  வேறுபட்டவரை
ஒன்றுபடுத்தும்;   தமிழ்க்     குலத்தை   அரிக்கின்ற  வேற்றுமைகளை
ஒழிக்கும்; தமிழருக்கு இன்ப நெறி காட்டும் என்று நம்புகின்றோம்.