பக்கம் எண் :

64தமிழ் இன்பம்

திருக்குற்றாலத்தின்     அருகே   சிறந்த   ஊர்கள்   சில  உண்டு.
வடநாட்டுக்   காசிக்கு நிகரான தென்காசியென்னும் ஊர் அதற்கு மூன்று
மைல்   தூரத்தில்   உள்ளது.   பதினைந்தாம்  நூற்றாண்டின்  இடைப்
பகுதியில்   தென்பாண்டி    நாட்டில்    ஆட்சி   புரிந்த   பராக்கிரம
பாண்டியனால்   தென்காசிக்  கோவில்   கட்டப்பட்டதென்று   சாசனம்
தெரிவிக்கின்றது.  அரசாளும்   உரிமையும்   அருந்தமிழ்ப்  புலமையும்
ஒருங்கே  வாய்ந்த   அதிவீரராம  பாண்டியர்  தென்காசியில்  இருந்து
நைடதம் முதலிய  நயஞ்சான்ற தமிழ் நூல்களை இயற்றினார் என்பர். 

இன்னும்     திருக்குற்றாலத்திற்கு   அண்மையிலுள்ள  சிற்றூர்களில்
ஒன்று  மேலகரம்  எனப்படும்.   அவ்வூரில்   சைவ வேளாள மரபிலே
பிறந்து  தெள்ளிய  கவிதைபாடும்   திறமை பெற்றார் திரிகூட ராசப்பர்.
இவர்   இயற்றிய  ‘குற்றாலக்  குறவஞ்சி’    நாடகத்தை  நற்றமிழுலகம்
புகழ்ந்து பாராட்டுகின்றது.

மலைச்சாரலிலே,  தேனும்  தினைமாவும் உண்டு திளைக்கும் கானவர்
வாழ்க்கையும்,   காதலுற்ற     கடுவன்   மந்திக்குக்  கனி  கொடுத்துக்
கொஞ்சும்  காட்சியும்,  அருள்    வடிவாய அருவி, அகத்தும் புறத்தும்
செறிந்த  அழுக்கைப்  போக்கிக்   கழுநீராய் ஓடும் அழகும், பண்பாகக்
குறி   சொல்லிப்   பட்டும்  மணியும்    பரிசு  பெறும்  குறவஞ்சியின்
கோலமும் அந்நூலில் இனிமையாக எழுதிக் காட்டப்பட்டுள்ளன.

திரிகூடராசப்பர்     இயற்றிய குறவஞ்சி  நாடகம்  மதுரை மாநகரில்
அரசு  வீற்றிருந்த  முத்து  விசயரங்க    சொக்கநாத நாயக்கர் கருத்தை
கவர்ந்தது. அதன்